தன்னுடைய அடுத்தப் படம் தமிழில்தான்: மனம் திறந்த அட்லீ!!
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மூன்று மெகா ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் இளம் இயக்குனர் அட்லீ.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மூன்று மெகா ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் இளம் இயக்குனர் அட்லீ.
அட்லீ இயக்குனர் ஷங்கர் என்பவரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி" திரைப்படம் மூலம் (2013) இயக்குனராக அறிமுகமானார்.
அட்லீயின் முதல் திரைப்படமே பெரிய வெற்றியடைந்தது. பின்னர், நடிகர் விஜயை வைத்து தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இவர் இரண்டாவது இயக்கத்தில் உருவான தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது கிடைத்தது. அதன் பின்னர், கடந்த தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்‘ படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு கல்லூரி திறப்பு விழாவில் பேசிய அட்லீ என்னுடைய அடுத்த படம் ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோவுடன் தன் இருக்கும் என கூறியிருந்தார்.
இதையடுத்து, அட்லீ தன்னுடைய அடுத்தப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து தான் படம் எடுப்பது உறுதி என்றும், ஆனால் அந்தப் படம் உருவாக இன்னும் காலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அந்தப் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் விஜய்யுடன் இணைந்து தமிழில் ஒரு மெகா பட்ஜெட் படத்தை தரப் போகிறாராம். அட்லீயின் இந்த தெலுங்குப் படம் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.