`எங்களை கைது செய்து நிரப்ப சிறை போதாது` - MK ஸ்டாலின்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுப்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுப்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் புறப்பட்டு, அங்குள்ள பூங்காவில் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து போராட்டத்தினை கைவிடும்படி காவல்துறை ஆணையர் அன்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை பயன் அளிக்காததினை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் "எங்களை கைது செய்து நிரப்ப சிறை போதாது, விடுவித்தாலும் மீண்டும் நாளை போராட்டம் நடத்துவோம்" என முக ஸ்டாலின் தெரிவித்தார்.