பிராட்பேண்ட் மற்றும் வைஃபை மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்யும் வசதிக்கு டிராய் ஒப்புதல் அளித்துள்ளது!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. 


இதையடுத்து வாடிக்கையாளர்களும் யாருடா குறைவான விலையில் அதிக சலுகையை  கொடுக்கிறார்கள் என்று வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், தொலைபேசியில் பேலன்ஸ் இல்லாமலே கால் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது..!  


வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்ய இன்டர்நெட் டெலிபோனி (internet telephony app) செயலியை நடைமுறைக்கு கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.


இது குறித்து டிராய்யின் ஆலோசகர் அரவிந்த்குமார் பேசுகையில்..!


''மொபையில் சிக்னல் மோசமாக இருக்கும் இடங்களில் கூட இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெற முடியும் வீட்டில் மற்றும் தூரப்பயணங்களின்போது வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் வசதி இருந்து, மொபைலில் சிக்னல் கிடைக்காமல் இருந்தால், செயலியை பயன்படுத்தி தொலைப்பேசி அழைப்புகளை செய்யலாம்.


இந்த முறையை பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சில மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம்'' என்றார்.