உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டம் துவக்கம்!
இன்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காச நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இன்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காச நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
"உலக காசநோய் தினத்தை" முன்னிட்டு, காசநோய் தடுப்புப் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு கையடக்கக் கணினிகள் வழங்கும் திட்டம் தெடங்கப்பட்டது.
காசநோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் (REACH) என்னும் தொண்டு நிறுவனம் மற்றும் NIRT (National Institute for Research in TB) இணைந்து நிறுவியுள்ள 35 நக்ஷத்ரா மையங்கள் ஆகியவற்றை துவக்கி வைத்தார்கள்.
மேலும், காசநோய் கண்டறியும் அதிநவீன கருவியுடன் கூடிய இரண்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சிக்கு பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் 2025-ல் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்ததை சுட்டிக்காட்டி, அதற்கு தமிழக அரசு பாடுபடும் என உறுதியளித்தார்.