ஹிந்தி நடிகை வித்யா பாலனின் படமான "தும்ஹாரி சுலு" ரீமேக்கில் ஜோதிகா நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிக்க விதார்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை ஜோதிகா 36 வயதினிலே, மகளீர் மட்டும் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து, தற்போது வெளியான நாச்சியார் திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமைந்தது. 


இதையடுத்து, ஹிந்தி நடிகை வித்யா பாலனின் படமான "தும்ஹாரி சுலு" ரீமேக்கில் ஜோதிகா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஜோதிகாவின் மொழி பட இயக்குனரான ராதா மோகன் இயக்க உள்ளார்.


நடிகை வித்யா பாலனின் நடிப்பில் வெளியான படம் "தும்ஹாரி சுலு"-ன் கதைக்களம் திருமணமான ஒருபெண் வானொலியில் ஆர்.ஜே-வாக வேலை கிடைத்ததும் எவ்வாறு அவர்களின் வாழ்க்கை மாறுகிறது என்பாத்து பற்றிய திரைப்படம். இந்த படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார். 


இந்நிலையில், தமிழில் உருவாகும் இப்படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிக்க விதார்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இது குறித்து இயக்குனர் ராதாமோகன் கூறுகையில், 'இது வழக்கமான ஹீரோ ரோல் இல்லை. நுண்ணுணர்வுகளைக் கூட மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அதைத் திரையில் வெளிப்படுத்தக் கூடிய நடிகரைத் தேர்வு செய்ய விரும்பினோம். 


தற்போதைய இளம் நடிகர்களில் விதார்த் அதற்குப் பொருத்தமாக இருப்பார் என்பதால் தேர்வு செய்தோம் என்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் ஸ்ட்ரைக் முடிந்ததும் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.