நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தபடத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சிவகார்திகேயன், ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் கிடைத்த மக்களின் ஆதரவால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 


இந்நிலையில், இன்று ரஜினி, விஜய்க்கு பிறகு அதிக குடும்ப ரசிகர்களை கொண்டு முன்னணி ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர், படங்கள் என்றாலே விரும்பி போகும் நிலைக்கு அவர் வளர்ந்துவிட்டார், சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்தார்.


அதில், விஜய் குறித்து அவரிடம் கேட்ட போது ‘இந்தியாவில் நான் பல நடிகர்களின் படங்களை பார்த்து விட்டேன். ஆனால், காமெடி, ஆக்‌ஷன், டான்ஸ் என அனைத்தையும் செய்ய தெரிந்த இந்தியாவில் நம்பர் 1 நடிகர்கள் என்றால் அது தளபதி தான்’ என்று கூறியுள்ளார்.


மேலும் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர், அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். ஒரு கட்டத்தில் தொகுப்பளராகவும் உயர்ந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள சென்ற சிவகார்த்திகேயனுக்கு "என்டர்டெயின்மென்ட் கிங்" என்ற படத்தை தனியார் தொலைக்காட்சி வழங்கி அவரை சிறப்பித்தது.