விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவான திரைப்படம் "இரும்புத்திரை". 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, திரைத்துறையினரின் வேலைநிறுத்தம் காரணமாக இதன் ரிலீஸ் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 


இந்த நிலையில், தற்போது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் படத்தினை தயாரித்தது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.


இத்திரைப்படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



மேலும் இந்த படத்தின் புரமோஷன் இன்று முதல் தொடங்கவுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது


இந்த படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இந்த படத்தின் புரமோஷன் இன்றுமுதல் தொடங்கவுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.