காலா-வுக்கு செக் வைத்த கர்நாடகாவுக்கு விஷால் கண்டனம்!
ரஜினி நடித்த காலா படத்தை வெளியிடக்கூடாது என விஷால் கருத்து!!
ரஜினி நடித்த காலா படத்தை வெளியிடக்கூடாது என விஷால் கருத்து!!
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.
மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்.
முதல் பார்வை டிரெய்லர் மற்றும் காலா படத்தின் பாடல்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து, நேற்று "காலா" படத்தின் புதிய டிரெய்லரை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, நேற்று காலா டீசர் வெளியானதில் இருந்து 12 மணி நேரத்திற்குள், 26 லட்சத்துக்கும் அதிகமானோர் யூ டியூப்பில் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, இத்திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனையை காரணம் கூறி படத்தை வெளியிடாமல் இருப்பது தவறு என விஷால் கூறியுள்ளார். காவிரி பிரச்சனை குறித்து நானும் பேசியுள்ளேன். மேலும் ரஜினி, கமல், சிம்பு ஆகியோர் பேசினர்.
அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்து. இதற்கும் திரைப்படத்திற்கும் சம்பந்தம் இல்லை, படம் ஒரு தயாரிப்பாளருடைய உழைப்பு. அரசியல் காரணங்களுக்காக சினிமாவை வெளியிடாமல் இருப்பது தவறு எனவும் கூறினார். ‘காலா’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அங்குள்ள பிலிம் சேம்பரிடம் பேசியுள்ளதாகவும், நாளை அவர்கள் முடிவினை தெரிவிப்பர் எனவும் விஷால் தெரிவித்தார். மேலும், இது சம்பந்தமாக தேவைப்பட்டால், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்போம் எனக் கூறினார்.
இதனையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து எழுந்த கேள்விக்கு பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்வதை விட்டு, உள்நாட்டு பிரச்சனையை கவனிக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.