சமீபகாலமாக IndiGo விமானங்கள் எந்திர கோளாறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் நேற்றிரவு Vistara UK966 விமானமானது இந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கப் பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றிரவு சுமார் 8.40 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Vistara UK966 விமானமானது 8.56 மணியளவில் தரையிறக்கப் பட்டுள்ளது. விமான நேரலை தகவல் நிலையங்களின் தகவல்கள் படி இந்த விமானமானது 1000m உயரத்தினை கூட எட்டவில்லை.


இந்த விமானமானது A320neo வகைப்பாட்டினை சார்ந்தது. சமீப காலமாக இந்த A320neo வகைபாட்டினை கொண்ட IndiGo விமானங்கள் தொடர்ந்து எந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கத்து.


இந்நிலையில் நேற்றை இந்த தரையிறக்கமும், விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக தான் என தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை மறுக்கும் வகையில் Vistara நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றின் பதிவிட்டுள்ளது.


இந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளதாவது...



தரையிரக்கம் செய்யப்பட்ட A320neo விமானத்தில் இரண்டு எந்திர பயண்பாடு வசதிகள் உண்டு. பயணத்தின் போது GE/CFM எந்திரமே பயன்படுத்ததப்பட்டது. எனவே எந்திர கேளாறு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என அறிவித்துள்ளது!


பின்னர் விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று விடியற்காலை 1.30 மணியளவில் இந்த விமானமானது அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. உன்மையில் இந்த விமானமானது நேற்று இரவு 8.35 மணியளவில் புறப்பட்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது!