உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜீயம் குழுவில் காலியாக உள்ள இரண்டு இடங்களை நிரப்புவதற்கு உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் கே.எம்.ஜோசப் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஜோசப் தேர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி நியமனம் பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு.


சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஜோசப் நியமனம்: மத்திய அரசு மறுப்பு


இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.


அதில் கூறியதாவது:-


நாளை உச்ச நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவி ஏற்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேவேளையில், நீதிபதி கே.எம். ஜோசப் நியமனத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. 


 



 


கே. எம். ஜோசப் நியமனத்தை நிறுத்தி வைத்திருப்பதற்க்கான காரணம் என்ன? அவரது மாநிலமா அல்லது அவரது மதம் காரணமா அல்லது உத்தரகண்ட் வழக்கில் அவரது தீர்ப்பு காரணமா? 


 



 


உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நியமனத்தை இறுதிச்செய்து அனுப்பியுள்ளது. ஆனால் ஜோசப் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


சட்டத்தை விட மோடி அரசாங்கம் பெரியதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


 



 


நீதிபதி கே. எம். ஜோசப் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கிறார்.