சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஜோசப் நியமனம்: மத்திய அரசு மறுப்பு

உத்தரகாண்ட் ஐகோர்ட் நீதிபதி ஜோசப் நியமனம் நிறுத்தி வைப்பு. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 11, 2018, 09:55 AM IST
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஜோசப் நியமனம்: மத்திய அரசு மறுப்பு title=

உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜீயம் குழுவில் தற்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வரர் மற்றும் ரஞ்சன்  என மூன்று நீதிபதிகள் மட்டும் உள்ளனர். இரண்டு இடங்கள் காலியாக உள்ளது. 

இதனால் கடந்த ஜனவரி மாதம் கொலிஜீயம் குழுவிற்க்கான இரு நீதிபதிகளின் பெயரை உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அவர்கள் உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆவார்கள்.

மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் கே.எம்.ஜோசப் நியமனத்துக்கு  ஒப்புதல் அளிக்கவில்லை மத்திய அரசு. ஜோசப் தேர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி நியமனம் பரிந்துரையை  திருப்பி அனுப்பியது மத்திய அரசு.

இதற்கு காங்கிரஸ் உட்பட பலர் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Trending News