15:55 03-05-2018
ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான பின் திவாகரன் 3 மணி நேரம் விசாரணையில் கூறியது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இருமுறை மருத்துவமனை வந்தேன் ஆனால் ஜெ.வை பார்க்கவில்லை. சசிகலாவை தவிர வேறு யாரும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.  


மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்று திவாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 



முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். 


அப்போது இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார். 


இதையடுத்து, தமிழக அரசு சார்பில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 


இதில் முன்னாள் தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகனராவ், விவேக், கிருஷ்ணப்பரியா, மருத்துவர்கள் பாலாஜி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். 


இதையடுத்து, சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு, மே-1ம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் மே 3 ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. 


இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று ஆஜரானார்.