உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. மதியிறுக்கம் என்பது, பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதியிறுக்கம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.


இது மூளையின் முக்கிய செயல்பாடுகளான பேச்சுத்திறன், சமுதாயத் தொடர்பு மற்றும் புலன் உணர்வுகளை பாதிக்கும் ஒரு வளர்ச்சி குறைவு நோயாகும். இந்த நோய் பாதித்த ஒவ்வொருவரும் வேறுபடுவர். குழந்தைகள் வளரும்போதே இதை அறிய முடியும்.


ஆட்டிஸத்தின் அறிகுறிகள் பின்வருமாறு:


> பிறருடன் எப்படிப் பேசுவது, விளையாடுவது மற்றும் ஒருவரை நண்பர் ஆக்கிக் கொள்வதில் பிரச்னை.
> பிறர் தொடுவதையோ/அரவணைப்பதையோ விரும்பாதது.
> தாமதமாகவே பேசுவது.
> தப்புத் தப்பாக வார்த்தைகளை உபயோகிப்பது.
> சிறிய மாற்றங்கள் மூலம் கவலைப் படுவது.
> நடைமுறையில் சின்ன மாற்றத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாது.
> இயல்பற்ற தோற்றம், வித்தியாசமாக நடப்பது.