அமெரிக்காவை சேர்ந்த 10 வயது சிறுமி, எம்மா (Emma). இவர், தனது சிறு வயது காதலனான டானியல் மார்ஷல் கிரிஸ்டோஃபர் என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் அந்த குழந்தைகளுடைய பெற்றோரின் சம்மதத்துடன் நடைப்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோயால் பாதிப்பு:


அமெரிக்க நாட்டைச்சேர்ந்த அலினா மற்றும் ஆரோன் எட்வார்ட்ஸ் தம்பதியின் செல்ல மகள், எம்மா. சிறுமி எம்மா, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Acute Lymphoblastic Leukemia என்ற ஒருவகை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோய் குழந்தைகளை அதிகம் தாக்கும் புற்றுநோய் வகைகளுள் ஒன்ரு. இந்த வகை புற்றுநோய் இரத்தத்தையும் எலும்பு மஜ்ஜையையும் பாதிக்கும். தங்கள் குழந்தைக்கு இப்படியொரு நோய் வந்த செய்தியை கேட்டவுடன் சிறுமியின் பெற்றோர் உருகுலைந்து போயுள்ளனர்.  இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவருக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தங்களது குழந்தை எப்படியாவது உயிர் பிழைத்து விடுவாள் என அவர்கள் நம்பியுள்ளனர். சிறுமி எம்மாவிற்கு வந்திருக்கும் நோயை குணப்படுத்த முடியாது என்றும் அவர் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் எனவும் கடந்த ஜூன் மாதம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


கடைசி ஆசை:


தங்களது குழந்தை இறக்க போகிறது என்ற செய்தியை கேட்ட பெற்றோர், எம்மாவிடம் அவரது கடைசி ஆசையை கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி, தான் சிறுவயதில் இருந்து காதலித்து வரும் டேனியல் மார்ஷலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார். இவர்கள் இருவரும் 3ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் முயற்சியில் பலர் பங்கேற்றுள்ளனர். 


மேலும் படிக்க | 14 வயது மாணவரை 25 முறை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை ! 600 ஆண்டு சிறைதண்டனை?


திருமணம்:


எம்மாவின் கடைசி ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றியே தீர வேண்டும் என்று எண்ணிய பெற்றோர், இந்த திருமண ஏற்பாடுகளை இரண்டு நாட்களுக்குள் செய்து முடித்துள்ளனர். எம்மாவின் பாட்டி வீட்டு தோட்டத்தில் இந்த திருமணம் நடந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி நடந்த இந்த திருமண விழாவில் 100க்கும் மேற்பட்டோர் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். சிறுமியின் தந்தை ஆரோன் மனமகளை மணமேடைக்கு அழைத்து வர, சிறுவர்களின் நண்பர்கள் அவர்களுக்கு மணமகள் மற்றும் மணமகன் தோழிகளாக இருந்துள்ளனர். குடும்ப நண்பர் ஒருவர் பைபில் வாசகத்தை படித்து இந்த திருமணத்தை அரங்கேற்றியுள்ளார். சிறுமி எம்மா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த திருமணம் நடைப்பெற்றுள்ளது. 


உயிரிழப்பு: 


திருமணம் நடைப்பெற்ற 12 நாட்களுக்குள் சிறுமி எம்மா உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் (ஜூலை) 11ஆம் தேதி அவர் காலமாகியுள்ளார். தனது மகள் எம்மா குறித்து ஊடகத்திடம் பேசிய அவரது தாய், “குழந்தைகள் என்றால் பொதுவாக பொழுதுபொக்கு பூங்காவிற்கு போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எம்மாவிற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும், மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. என் மகளை திருமணம் செய்து கொண்ட மார்ஷலும் மிகவும் நல்ல குழந்தை. திருமணத்தில் பலர் பங்கேற்று எம்மா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்” என்றார். 


புற்றுநோயை கண்டு பிடித்தது எப்படி..? 


சிறுமி எம்மா குறித்து பகிர்ந்து கொண்ட அவரது தாய், இறந்து போன சிறுமி குழந்தையாக இருந்த போது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதே இல்லை என்று கூறுகிறார். “சிறு வயதில் ஒரு நாளும் அவளுக்கு ஒரு நோய் கூட வந்தது கிடையாது. ஆனால் திடீரெண்டு சாப்பிடுவதையெல்லாம் வாந்தி எடுக்க ஆரம்பித்தால். தொடர்ச்சியாக உடல் நிலை சரியில்லாமல் போனது. ஒரு நாள் கால் தவறி அடிப்பட்டதால் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அப்போதுதான் அவளுக்குள் இருந்து புற்றுநோய் அவளது எலும்பினை தின்றுக்கொண்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது..” என்று கூறினார். எம்மாவின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் படிக்க | தினமும் ரூ.81 லட்சம் அபராதம்... META நிறுவனத்திற்கு ஏற்பட்ட சோதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ