14 வயது மாணவரை 25 முறை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை ! 600 ஆண்டு சிறைதண்டனை?

600 Years Jail May Possible: 74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் தனது 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்தக் குற்றச்சாட்டில் 600 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2023, 02:54 PM IST
  • இளைஞனை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த ஆசிரியை
  • 74 வயது பெண்ணுக்கு 600 ஆண்டு சிறை விதிக்கப்படலாம்
  • குற்றம் உறுதி செய்யப்பட்டது, தீர்ப்பு வெளியாகவில்லை
14 வயது மாணவரை 25 முறை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை ! 600 ஆண்டு சிறைதண்டனை? title=

74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் தனது 14 வயது மாணவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். குற்றவாளியான பெண்ணுக்கு 600 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மன்ரோ கவுண்டியில் 74 வயதான ஆசிரியை (முன்னாள்) ஒருவர், தனது மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியை ஒருவரின் இந்த தகாத செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிக்கு பல நூறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அக்டோபர் 27 அன்று குற்றவாளிக்கான தண்டனை அறிவிக்கப்படலாம் என்று மன்ரோ கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் கெவின் க்ரோனிங்கர் கூறுகிறார்.

ஊடக அறிக்கையின்படி, 74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் தனது 14 வயது மாணவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக திங்களன்று தண்டனை விதிக்கப்பட்டது.

தனியார் பள்ளி ஆசிரியை
தண்டனை விதிக்கப்பட்ட பெண் தோமாஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கற்பித்தார், மேலும் 2016-2017 ஆம் ஆண்டில் பள்ளியின் அடித்தளத்தில் டீனேஜ் பையனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது நெல்சன்-கோச்க்கு 67 வயது, சிறுவனுக்கு 14 வயது என்று கூறப்படுகிறது.

ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணை ஐந்து மணி நேரம் நீடித்தது. விசாரணையில் அந்தப் பெண்ணைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், "இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் இளைஞன்" என்று ஆசிரியையாக பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பெண்ணின் குற்றத்தை உறுதி செய்தது. "அவர் உண்மையைச் சொன்னாள், நடுவர் மன்றம் அவரிடம் தெளிவாகக் கேட்டறிந்தது" என்று நீதிபதி தெரிவித்தார்.  

மேலும் படிக்க | பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினர்..!

போலீசாரை பாராட்டிய நீதிபதி

விசாரணைக்கு தலைமை தாங்கிய டோமா காவல் துறையின் பால் ஸ்லோனையும் ஸ்கைல்ஸ் பாராட்டினார். "பாதிக்கப்பட்டவரின் வலிமை மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் தீவிரமான முழுமையான விசாரணை இல்லாமல், இந்த நியாயம் கிடைத்திருக்காது," என்று அவர் கூறினார்.

தண்டனை விதிக்கப்படும் வரை நெல்சன்-கோச் சிறையில் இருக்குமாறு ஸ்கைல்ஸ் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் மன்ரோ கவுண்டி சர்க்யூட் நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் ராட்க்ளிஃப் அக்டோபர் 27 அன்று தண்டனை விதிக்கப்படும் வரை ஜிபிஎஸ் மானிட்டர் மூலம் அவர் கண்காணிக்கப்படலாம் என்று கூறி குற்றவாளியை விடுவித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு, இதுபோன்ற பாலியல் வன்புணர்வு மற்றும் சீண்டல் வழக்குகளில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதால், அனைவரும் தீர்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சிக்கியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News