நேபாளத்தில் நேற்று பொக்காரா என்ற  இடத்திலிருந்து 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகரை நோக்கி பயணித்த விமானம், நடுவானில் திடீரென மாயமானது. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் விமானத்தை தேடி வந்த  ராணுவத்தினர், கோவாங் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதைக் கண்டறிந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் சுற்றளவிற்கு விமானத்தில் பாகங்கள் சிதறியதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | Breaking: நேபாளத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பயணம் செய்த விமானம் மாயம்


விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உட்பட 22 பயணிகள் இருந்தனர். 15 ராணுவ வீரர்கள் கொண்ட குழு, விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நேபாள ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இந்த நிலையில், விமானத்தில் பயணித்தவர்களில் 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 


விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாக தாங்கள் சந்தேகிப்பதாகவும், இந்த விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுவதாகவும் நேபாள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR