டாக்கா: வடக்கு பங்களாதேஷில் (North Bangladesh) இன்று (புதன்கிழமை) மதரஸா (Madrassa Students) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 50 பேரைக் கொண்ட பயணிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் நெட்ரோகோனா மாவட்டத்தின் மதன் உபசிலாவில் நடந்ததாக டாக்கா ட்ரிப்யூன் (Dhaka Tribun) தெரிவித்துள்ளது.


மைமென்சிங்கைச் சேர்ந்த மதரஸா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 48 பேர் பயணத்திற்காக படகில் ஏறி சென்றுள்ளனர்.


ALSO READ |  வங்க தேச துறைமுகம் வழியாக முதல் சரக்கு கப்பல்… புதிய வர்த்தக மையமாக மாறும் திரிபுரா


இதுவரை, 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு பயணி காணாமல் போயுள்ளார் என மதன் உபசிலாவின் (Madan upazila) அதிகாரி ஒருவர் மேற்கோள் காட்டியுள்ளார்.


விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுபோன்ற விபத்துக்கள் பங்களாதேஷில் அடிக்கடி நடப்பவை. 


கப்பல்களின் மோசமான பாதுகாப்புத் தரங்களும் அவற்றை பொறுப்படுத்தாமல் கப்பலை ஓட்டுவதும் பங்களாதேஷ் நதியில் அடிக்கடி படகு விபத்துக் காரணம் என பலமுறை குற்றம் சாட்டப்பட்டுள்ளன.


ALSO READ |  சீனா, நேபாளத்தை அடுத்த தற்போது பூட்டானும் இந்தியாவின் தலைவலியாக மாறுகிறதா?


ஜூன் மாதத்தில், தலைநகர் டாக்கா அருகே பங்களாதேஷில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.