சாலையோரத்தில் ஒதுங்கிய மலைப்பாம்பை அகற்ற முயல்வது தப்பில்லை, ஆனால், அந்த பாம்பு 19 அடி நீள மலைப்பாம்பு என்பது தான் அதிர்ச்சி தரும் விஷயம். பாம்பை அங்கிருந்து அகற்ற முயன்றபோது, கோபமடைந்த மலைப்பாம்பு பலமுறை அவரைக் கடிக்க முயற்சிக்கிறது. ஆனால் பாம்பாவின் பாச்சா ஹீரோவிடம் பலிக்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பு எஸ்கேப் ஆகமுடியாமல் அதை லபக்கென்று பிடித்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகிறது.


அமெரிக்காவின் புளோரிடாவில் நிகழ்ந்த இந்த அதிசயமான சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரிய மலைப்பாம்பை தங்கள் கைகளால் பிடித்த இரு நபர்களின் சாகசச் செயல் என்று பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால், சிலர், ‘இவ்வளவு ஆபத்தான விஷயத்தை ஏன் செய்ய வேண்டும்?’ என்ற கேள்விகளையும் எழுப்புகின்றனர்.


பாம்பை பிடித்த வீரர்கள், 'கிலேட்ஸ் பாய்ஸ்' என அழைக்கப்படுகின்றானர். இவர்களால் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு 19 அடி நீளமும் 125 பவுண்டுகள் (56 கிலோ) எடையும் கொண்டது என்பதை மாகாணத்தின் உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | உயிர் தப்பிக்க ஓடும் நபர்... துரத்தும் சினம் கொண்ட யானை: பகீர் வைரல் வீடியோ


ஜூலை 10 அன்று, அதிகாலை 1 மணியளவில், 22 வயதான ஜேக் வலேரி இந்த ஆபத்தான மலைப்பாம்பை பிக் சைப்ரஸ் தேசிய பாதுகாப்பில் பார்த்தார். இந்த மலைப்பாம்பை சாலையோரப் புற்களில் இருந்து ஒருவர் அகற்ற முயற்சிப்பதை வீடியோவில் பார்க்கலாம்.



அப்போது ​​கோபமடைந்த மலைப்பாம்பு பலமுறை அவரைக் கடிக்க முயற்சிக்கிறது, ஆனால் அந்த நபர் அதன் வாயை முழு பலத்துடன் பிடித்துக் கொள்கிறார். பின்னர் வனத்துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் மலைப்பாம்பு கொல்லப்பட்டது.


பாம்பு பிடிப்பவர் வலேரி மற்றும் அவரது கூட்டாளி ஸ்டீபன் கௌடா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் இந்த சம்பவம் குறித்து இவ்வாறு பதிவிட்டுள்ளனர். 'இந்த அனுபவத்தை எழுதுவது என்பது எவ்வளவு எழுதினாலும் குறைவாக இருக்கும். பிடிக்கப்பட்ட பாம்பின் எடை 125 பவுண்டுகள் மற்றும் அதன் நீளம் 19 அடி பெரிய பாம்பை பார்த்தது மிகவும் அதிசயமான ஒன்று’.


மேலும் படிக்க | எல்லை தாண்டிய PUBG காதல்... இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்...!


பாம்பின் நீளம் தென்மேற்கு புளோரிடாவின் பாதுகாப்புத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதிகாரப்பூர்வமாக இது மிக நீளமான லைப்பாம்பு என்று அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன்னதாக பிடிபட்ட மிகப் பெரிய மலைப்பாம்பு 18 அடி 9 அங்குலம் நீளம் கொண்டது.


இதுவரை இவ்வளவு பெரிய பாம்புகள் இருக்கும் என்ற எண்ணம் மட்டுமே எங்களுக்கு இருந்தது, ஆனால் இப்போது, இதை கண்ணால் பார்த்துவிட்டோம். தெற்கு புளோரிடாவின் ஸ்தாபக மக்கள்தொகையைப் புரிந்துகொள்வதில் அதன் மரபணு பொருள் முக்கியமானது. எங்கள் ஆராய்ச்சி கூட்டாளர்களுக்கு வழங்கப்படும் அளவீடுகள் மற்றும் மாதிரிகளை நாங்கள் சேகரிப்போம்.


'தென் புளோரிடாவின் சுற்றுச்சூழலில் சில தாக்கங்களை ஏற்படுத்த முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் விரும்புகிறோம், முடிந்தவரை அதைப் பாதுகாக்க விரும்புகிறோம். புளோரிடாவின் பாதுகாப்புத் துறை இந்த ஆபத்தான மலைப்பாம்புகளின் அச்சுறுத்தல்களைக் குறைக்க முயற்சிக்கிறது.


இவ்வளவு பெரிய பாம்பை பிடிப்பது ஆபத்தானது, உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்று வலேரி ஒப்புக்கொண்டார். ஆனால் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று கூறும் வலேரி, 2020 ஆம் ஆண்டு முதல் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


யுஏஇ டுடே உடனான உரையாடலில் பேசிய வலேரி, 'இவ்வளவுப் பெரிய பாம்பை பிடிக்க முடிந்தது மிகப் பெரிய விஷயம். கடந்த ஆண்டு நானும் எனது உறவினரும் 18 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தோம். இவ்வளவு பெரிய பாம்புகளை நம்மால் கையாள முடியும் என்பதை அப்போது உணர்ந்தோம்’ என்று கூறினார்.


மேலும் படிக்க |  பப்ஜி காதலனுக்காக 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் - மோடிக்கு கோரிக்கை வைத்த கணவன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ