உயிர் தப்பிக்க ஓடும் நபர்... துரத்தும் சினம் கொண்ட யானை: பகீர் வைரல் வீடியோ

Scary Animal Video: யானை நம்மை துரத்தினால் என்ன ஆகும்? கதி கலங்கும்!! அதை அப்பட்டமாக காட்டும் ஒரு பகீர் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 13, 2023, 11:37 AM IST
  • யானைப் பகுதிக்குள் ஊடுருவல்.
  • ஓடி தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்ட நபர்.
  • யானையின் கோவத்துக்கு ஆளான நபரின் வீடியோவை இங்கே காணலாம்.
உயிர் தப்பிக்க ஓடும் நபர்... துரத்தும் சினம் கொண்ட யானை: பகீர் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோக்களுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்கு, பாம்பு, யானை, சிங்கம், நாய், பூனை ஆகியவை இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். இவற்றின் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. இவற்றை பற்றிய வீடியோக்களை காண்பதிலும் இவற்றை பற்றி தெரிந்துகொள்வதிலும் மக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பொதுவாகவே விலங்குகளின் வீடியோக்களை காண நமக்கு ஆச்சரியமாக இருப்பதோடு அதிசயமாகவும் இருக்கிறது. விலங்குகளின் உலகில் நாம் அருகில் சென்று காண முடியாத பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களின் மூலம் காண்கிறோம். 

அப்படி ஒரு சுவாரசியமான வீடியோ தற்போதும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. காட்டில் சுற்றித் திரியும் சில விலங்குகள் அமைதியான இயல்புடையவை. சில விலங்குகளோ மனிதர்கள் மற்றும் பிற மிருகங்களை பார்த்த உடனேயே தாக்கும் இயல்பு கொண்டவையாக உள்ளன. ஆனால், அமைதியான விலங்குகளும் தொந்தரவு செய்யப்பட்டாலோ அல்லது அவற்றின் ஓய்வுக்கு இடையூறு ஏற்பட்டாலோ, மூர்க்கத்தனமாக மாறும். 

யாரையும் அத்தனை எளிதாக தாக்க விரும்பாத யானையும் அத்தகைய விலங்குகளில் ஒன்றாகும். யானைகள் பொதுவாக மிக அமைதியாக இருக்கும். ஆனால், அவை கோபமடைந்தால், அதன் முன்னால் யாராலும் தாக்குப்பிடிக்க முடியாது. அது தனது பாகன் அல்லது முதலாளியை கூட விட்டுவைக்காது. 

தற்போது வெளியாகி பீதியை கிளப்பியுள்ள வீடியோவில், யானையின் எல்லைக்குள் தற்செயலாக நுழைந்த ஒரு நபருக்கு ஏற்பட்ட கதியை காண முடிகின்றது. இதை பார்த்தால், நமக்கே உடல் ஆட்டம் காண்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஆத்திரம் அடைந்த யானை

ஆத்திரமடைந்த ஒரு யானை ஓடி வந்து ஒரு மனிதனை துரத்துவது வைரலான இந்த வீடியோவில் தெரிகிறது. அந்த நபர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. யானை தன்னை துரத்துவதைப் பார்த்த அந்த நபர் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார் என்பது  வீடியோவைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது. அவர் கண்களில் அப்பட்டமான அச்சத்தை நன்றாக காண முடிகின்றது. யானையின் பகுதியிலிருந்து அந்த நபர் வெளியே வந்தவுடனேயே யானையும் அமைதியாகிவிடுகிறது. இதற்கிடையில் ஏராளமானோர் கார் மற்றும் பிற வாகங்களில் அந்த இடத்திற்கு வருகின்றனர். எப்படியோ அந்த நபர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

மேலும் படிக்க | Viral Video: கலிகாலம் என்றால் இது தானோ... பாம்பை சுவைத்து சாப்பிடும் மான்!

யானைப் பகுதிக்குள் ஊடுருவல்

யானை கொண்ட கோபத்திற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. எனினும், குறித்த நபர் தற்செயலாக யானை பகுதிக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கோபமடைந்த யானை அந்த மனிதனுக்கு பாடம் புகட்டியது என்று கூறப்பட்டுள்ளது.

ஓடி தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்ட நபர்

இந்த வீடியோ நிஜமாகவே மனதை பதட்டமடையச் செய்வதோடு பீதியையும் கிளப்புகிறது. அந்த மனிதன் அப்படி ஓடி தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவில்லை என்றால் அவரது உயிர் தப்பித்திருக்குமா என்பதை கூறுவது கடினம். இந்த வீடியோ தமிழகத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அந்த நபர் யானையின் பகுதியில் என்ன செய்து கொண்டிருந்தார், எப்படி அங்கு வந்தார் என்பது தெரியவில்லை.

யானையின் கோவத்துக்கு ஆளான நபரின் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில், @kovaikarthee என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

‘அந்த நபருக்கு நல்ல அதிர்ஷ்டம்!!’ என ஒருவர் எழுதியுள்ளார். ‘யானையின் கோவத்தை பார்த்தால் பயமாக இருக்கிறது’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | சோறூட்டிய பெண்.. நாயின் அந்த பார்வை.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News