ஹாங்காங் நாட்டின் தை போ நகரில், போருந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் சாலையில் சென்ற இரட்டையடுக்கு பேருந்து ஒன்று விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவயிடத்திலேயே பிலயானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


பலியானவர்களில் 17 ஆண், 2 பெண்கள் உள்ளடங்களுவர், மேலும் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


உள்ளூர் நேரப்படி இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


இவர்களில் 17 பேர் உயிருக்கு ஆபாத்தான நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.