கோலாலம்பூரில் அருகே பள்ளியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக பலியாயினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியான ‛தருல் குரான் இட்டிஃபா' பள்ளியில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. 


இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக பலியாயினர். தற்போது தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


பலியான மாணவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.