பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த ஒரு பேரணியில் குண்டுவெடிப்பு: 39 பேர் காயமடைந்தனர்!!
பாகிஸ்தானின் கராச்சியில் புதன்கிழமை மாலை நடந்த ஒரு இந்திய எதிர்ப்புப் பேரணியில் நடந்த கிரினேட் தாக்குதலில் 39 பேர் காயமடைந்தனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் கராச்சியில் (Karachi) புதன்கிழமை மாலை நடந்த ஒரு இந்திய எதிர்ப்புப் பேரணியில் நடந்த கிரினேட் தாக்குதலில் (Grenade Attack) 39 பேர் காயமடைந்தனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-i-islami) என்ற இயக்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியின் ஓரு அங்கமாக இருந்த ஒரு டிரக்கின் அருகில் குண்டு வெடித்ததாக பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார்.
பைக்கில் வந்த இருவர் பேரணி நடந்த இடத்தில் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு (Article 370) நீக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதலில் 39 பேர் காயமடைந்ததாகவும், அதில், ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், சிந்த் சுகாதார அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் மீரான் யூசுஃப் தெரிவித்தார்.
ALSO READ: குஜராத்தையும் வளைத்து மேப் போட்ட பாகிஸ்தான்: அபத்த அரசியல் என இந்தியா பதிலடி
காயமடைந்தவர்களில் ஐந்து பேர் அல் முஸ்தஃபா மருத்துவமனையிலும், ஏழு பேர் ஜின்னா முதுகலை மருத்துவ மையத்திலும் (JPMC), 11 பேர் ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையிலும், 10 பேர் லிக்காயத் தேசிய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிந்துதேஷ் புரட்சிப் படை என்னும் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பொறுப்பேற்றுள்ளது.
வேறொரு சம்பவத்தில், கராச்சியின் கோரங்கி பகுதியில், பட்டாசு வெடி தாக்குதல் ஒன்றில் மூவர் காயமடைந்தனர். பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர், கோரங்கியில் உள்ள ஒரு எஸ்டேட் ஏஜன்சியில், பட்டாசு குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் ஜின்னா முதுகலை மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: பெய்ரூட் குண்டு வெடிப்பு: வைரல் வீடியோவில் காணப்பட்ட கொடூரங்கள்....See Video