கடல்நீரும் சிறுநீரும் மட்டுமே உணவு... 14 நாட்கள் கப்பலில் பயணித்த 4 நைஜீரியர்கள்..!
தங்கள் வறுமையை போக்கிக் கொள்ள 4 நைஜீரியர்கள் சரக்கு கப்பலில் யாருக்கும் தெரியாமல் 14 நாட்கள் பயணித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்
பொருளாதார நெருக்கடி ,உள்நாட்டு அரசியல் பிரச்சனை ,தினம் தோறும் போராட்டம் என நைஜீரிய மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது போதாது என அவ்வப்போது இயற்கை பேரிடர்களும் அந்த நாட்டை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலைகள் தான் வறுமையில் இருந்து விடுபட நினைத்த வாலிபர்கள் நான்கு பேர் கூட்டாக சேர்ந்து சரக்கு கப்பலில் அடிப்பகுதியில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்து உள்ளனர்
இந்தப் பயணமானது நைஜீரியா லோகாஸ் பகுதியில் இருந்து ஜூன் 27 ஆம் தேதி தொடங்கிய அவர்களது பயணம் 14 நாட்கள் கழித்து பிரேசிலில் முடிவுக்கு வந்துள்ளது சுமார் 5 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் அட்லாண்டிக் கடலில் பயணித்த இவர்கள், டிரஸ்ஸில் நாட்டு தென்கிழக்கு துறைமுகமான விக்டோரியாவில் வைத்து பிரஸ்ஸில் கடற்படை போலீசாரால் மீட்கப்பட்டனர்.
மேலும் படிக்க | கருப்பைக்குள் செலுத்தப்பட்ட ஆசிட் ! சொல்ல முடியாத துன்பம் அனுபவித்த பெண்
இந்நிலையில் பிரபல சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி மீட்கப்பட்ட நான்கு பேரில் இரண்டு பேர் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் சொந்த நாட்டிற்கே திரும்பி செல்ல முடிவு செய்து இருப்பதாகவும் 38 வயது நிரம்பிய யேயே மற்றும் 35 வயதான ரோமன் கோய்மென் ஆகிய இருவரும் பிரேசில் நாட்டில் வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது
இந்த ஆபத்தான பயணம் பற்றி பேசி உள்ள யேயே நான் உண்மையில் ஒரு விவசாயி. எங்கள் ஊரில் நாங்கள் பயிரிட்டு இருந்த வேர்க்கடலை மற்றும் பாமாயில் பண்ணை ஆகியவை பெருவெள்ளத்தில் அழிந்துவிட்டது அது மட்டும் இல்லாமல் எங்கள் வீடும் வெள்ளத்தில் சென்று விட்டது நான் ஒரு மீனவ நண்பனின் உதவியால் இந்த சரக்கு கப்பலுக்கு வர முடிந்தது. அப்போது அந்த கப்பலின் அடிப்பகுதியில் ஏற்கனவே மூன்று பேர் பயணிக்க காத்திருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன் அதற்கு முன் அவர்களை நான் பார்த்ததே கிடையாது
எனக்கு பயங்கரமான அனுபவம் கப்பலின் அடிப்பகுதியில் அமர்ந்து பயணிப்பது என்பது எளிதானது இல்லை. யாருக்கும் தெரியாமல் நாங்கள் கப்பலில் பயணிப்பதை கப்பல் பணியாளர்கள் பார்த்தால் எங்களை கடலில் தள்ளி கொன்று விடுவார்கள் என பயமாக இருந்தது அதனால் நாங்கள் சத்தம் போடாமல் இருந்து வந்தோம். அடிப்பகுதியில் இருந்து கீழே விழாமல் இருப்பதை உறுதி செய்ய வலையை கொண்டு சுக்கானை (Rotor) சுற்றி கட்டிக்கொண்டோம். ஒரு பக்கம் இன்ஜின் சத்தம், மறுபக்கம் கப்பல் குலுங்குவதில் நாங்கள் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் இதனால் தூக்கமற்ற பயணமாகவே எங்கள் பயணம் அமைந்தது. பின்னர் நாங்கள் ஐரோப்பாவுக்கு செல்வோம் என்று நினைத்தோம். ஆனால் நான் பிரேசிலில் இப்போது இருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை ஆச்சரியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இவர்கள் கப்பலில் பயணிப்பதற்கு முன்னதாகவே தேவையான உணவுப்பொருட்களையும் உடன் எடுத்துச் சென்றுள்ளனர் ஆனால் அந்த உணவுப் பொருள்கள் 10 நாட்களுக்குள்ளாகவே தீர்ந்து போய் உள்ளது. இதனால் கடைசி நான்கு நாட்கள் கடல் நீர் மற்றும் தங்களது சிறுநீரையும் குடித்த படியுயே இவர்கள் பயணம் செய்துள்ளனர். இத்தனை சவால்களைக் கடந்து பிரேசில் நாட்டுக்கு வந்த தங்களுக்கு அடைக்கலம் தர வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இவர்கள் கப்பலின் அடிப்பகுதியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ வெளியாகிய உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ