கருப்பைக்குள் செலுத்தப்பட்ட ஆசிட் ! சொல்ல முடியாத துன்பம் அனுபவித்த பெண்

குழந்தையின்மைக்காக IVF சிகிச்சை செய்ய சென்ற பெண்ணுக்கு மருத்துவர் ஊசியில் ஆசிடை வைத்து  செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.  

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : Aug 4, 2023, 05:18 PM IST
  • கருப்பைக்குள் செலுத்தப்பட்ட ஆசிட்
  • சொல்ல முடியாத துன்பம் அனுபவித்த பெண்
  • நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
கருப்பைக்குள் செலுத்தப்பட்ட ஆசிட் ! சொல்ல முடியாத துன்பம் அனுபவித்த பெண் title=

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் 33 வயதான கிறிஸ்டின். இவர் மாண்டிசோரியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். இவர் தனது கணவர் ஜேசன் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதி குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி  பரிசோதனைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி Main Line fertility என்ற கருவுறுதல் சிகிச்சை மையத்திற்கு சென்றுளார் கிறிஸ்டின். அங்கு ஆலிசன் ப்ளூ என்ற மருத்துவர் கிறிஸ்டினுக்கு (SHG) என்ற சிகிச்சை முறையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக டியூப் ஒன்றை கர்ப்பப்பைக்குள் செலுத்தி அதன் மூலமாக மருந்தை உள்ளே செலுத்த ஆயத்தமாகி உள்ளார். 

மேலும் படிக்க | குரங்குகளுக்கு விருந்து! மகிழ்விக்க குரங்கின் முன் நடனமாடும் மனிதர்கள்! விசித்திர திருவிழா

அப்போது தவறுதலாக அந்த சிகிச்சைக்கு தேவையான மருந்ததை விட்டு விட்டு trichloro acetic acid என்ற அமிலத்தை ஊசியில் ஏற்றி கர்ப்பப்பைக்குள் செலுத்தி உள்ளார். அமிலம் பிறப்புறுப்பு வழியாக கர்ப்பப்பைககுள் சென்றதும் அதன் வேலையை காட்டத் தொடங்கியுள்ளது அந்த பெண் வலியால் அலறி துடித்துள்ளார். அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்ட அமிலம் 85 சதவீதம் செறிவுடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கிறிஸ்டியனின் இனப்பெருக்க உறுப்புகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தான் உட்காரும்போது கூட வலியை உணர்வதாகவும் அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் தற்போதைய நிலவரப்படி கிறிஸ்டின்  முதல் மற்றும் இரண்டாம் நிலை உள் மற்றும் வெளிப்புற தீக்காயங்களுக்காக உள்ளூர் தீக்காயம் மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் Main Line fertility மீது நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும். மருத்துவமனை நிர்வாகம்  இன்னும் தங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் என்ன நடந்தது என்பதை கூட விளக்கவில்லை என்றும் கிறிஸ்டியனின் வழக்கறிஞர் ராபர்ட் மில்லர் பேசி உள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த அமிலத்தால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதன் நீண்ட கால விளைவுகள் எப்படி இருக்கும் என எங்களுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.IVF சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு ஆசிட் செலுத்தப்பட்ட சம்பவம் தற்போது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | டைட்டைன் நீர்மூழ்கி நிறுவனத்தின் அடுத்த பிளான் இதுதான்..! வீனஸ் கிரகத்துக்கு போலாமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News