மலேசியா: 9-வயது மதிக்கத்தக்க மலேசியா வாழ் தமிழ் சிறுமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்ளூர் ஊடக தகவலின் படி, பிரிஷா என்னும் 9 வயது சிறுமி யோகா, நீச்சல் உள்ளிட்ட கலைகளில் 14 உலக சாதனைகளை படைத்துள்ளார். சிறுமியின் திறனை பாராட்டும் விதமாக அவருக்கு கௌரவ டாக்கடர் பட்டம் அளிக்கப்படவுள்ளது.


சமீபத்தில் மலேசியாவில் நடைப்பெற்ற பண்டைய இந்திய கலைகள் நிகழ்ச்சியில் தேசிய அளவில் யோகாவில் இவர் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரிஷாவின் தாயார் மற்றும் பாட்டியும் யோகா பயிற்றுநர்கள் ஆவர். விரைவில் இவர்கள் மூவரும் இணைந்து புதிய உலக சாதனை படைக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.


பிரிஷாவிற்கான கௌரவ டாக்டர் பட்டம் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது. 9-வயது ஆகும் இச்சிறுமி இந்த அறிவிப்பின் மூலம் நாட்டின் இளம் டாக்கடர் பட்டம் வென்றவர் என்ற பெருமையினை பெருவார் என தெரிகிறது.