லைசன்ஸ் இன்றி 83 வயது வரை கார் ஓட்டிய நபர்; போலீஸில் சிக்காமல் தப்பி வந்த அதிசயம்!
வாகன விதிகளை மீறியதற்கான நம்மில் பலர் அபராதம் கட்டியிருக்கலாம். பெரும்பாலான அபரதாங்கள், ஹெல்மெட் அணியாதது, அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்ற காரணங்களுக்காக இருக்கலாம்.
வாகன விதிகளை மீறியதற்கான நம்மில் பலர் அபராதம் கட்டியிருக்கலாம். பெரும்பாலான அபரதாங்கள், ஹெல்மெட் அணியாதது, அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்ற காரணங்களுக்காக இருக்கலாம்.
டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்பதற்கான அபராதம் விதிக்கப்பட்ட விநோத வழக்கு ஒன்று வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் புல்வெல் என்னும் பகுதியை சேர்ந்த 83 வயது முதியவர், முதல் முறையாக உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக காவல்துறை அதிகாரி ஒருவரிடம் சமீபத்தில் பிடிபட்டதாகக் கூறியுள்ளார். 12 வயதில் இருந்து தான் வாகனம் ஓட்டி வருவதாகவும், 70 ஆண்டுகளாக லைசன்ஸ் இல்லாமல் தான் வாகனம் ஓட்டி வருவதாகவும் முதியவர் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.
ALSO READ | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?
மேலும், வாகன ஓட்ட தானே கற்றுக்கொண்டதகவும், இது வரை விபத்து ஏதும் ஏற்படுத்தியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் தான் வாகனம் ஓட்டி வந்த போதும், இன்று வரை பிடிபடவில்லை என்றும் அந்த நபர் கூறுகிறார். நீல நிற MINI ஒன் காருடன் காவல் துறையினரால் பிடிபட்டுள்ளார். 70 வருடங்களாக லைசன்ஸ், காப்பீடு ஆவணம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் செல்லும் ஒருவர், அபராதத்தில் இருந்து தப்பிப்பது மிகவும் அரிது என்பதில் மாற்றூ கருத்து ஏதும் இருக்க முடியாது.
மேலும் சுமார் 70 ஆண்டு காலம் வரை, தற்செயலாகக் கூட காவல்துறை சோதனையில் சிக்கவில்லை என்பது மிகவும் விந்தையானது. இrஉப்பினும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் மற்றும் தண்டனை குறித்த விவரம் ஏதும் வெளியிடவில்லை.
ALSO READ | அமெரிக்காவை புரட்டிப் போடும் பனிப்புயல்; நியூயார்க்கில் அவசர நிலை அறிவிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR