காபூலில் நடைப்பெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 40 எட்டியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐரோப்பிய யூனியன் அலுவலகம், அமைதி ஆணையம், உள்நாட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகம் நிறைந்த மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 


மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட பகுதிகளில், ஆம்புலன்ஸில் வெடிகுண்டுகள் நிறப்பட்டு பயரங்கரவாதியால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த தாக்குதலில் காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப் பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 



முன்னதாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினென்டல் உணவகத்தில் கடந்த 20-ம் தேதி ஆயுதம் தாங்கிய தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் காபூலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அப்புகுதி மக்களிடேயே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது!