சீனாவை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு வினோதமான உடல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக 36 வயதான ஹுவாங் குயோக்சியான் (Huang Guoxian) அவரது வயிறு மட்டும் பெருத்துக் கொண்டே போகிறது. மிகப்பெரிய பலூனை போல் காட்சியளிக்கும் வயிறு, அவரது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு குழந்தைகளின் தாயான ஹுவாங் 121 பவுண்டுகள் எடையுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் அவரது வயிற்றின் எடை மட்டும் 44 பவுண்டுகள் ஆகும். அதாவது வயிற்றின் எடை, மொத்த உடல் எடையில் கிட்டத்தட்ட 36% ஆகும்.


ALSO READ | எல்லை மீறும் சீனாவின் பேராசை... தஜகிஸ்தான் தலையிலும் கை வைக்கிறது ..!!!


அன்ஷுன் புற நகர் பகுதியில் உள்ள  ஒரு  கிராமத்தில் வசிக்கும் அவர், இந்த பிரச்சனை காரணமாக,தன்னால் சரியாக தூங்கவும் முடியவில்லை, நடக்க இயல்வில்லை, தனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியவில்லை என மிகவும் வருந்துகிறார்.


பஸ்ஸில்  பயணம் செய்யும் போது, மக்கள் கர்ப்பிணிப் பெண் என தவறாகப் புரிந்துகொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்த நோயால்  பாதிக்கப்பட்டார். அவர், மருத்துவ உதவியை நாடினார், அதைத் தொடர்ந்து மருத்துவர் பரிந்துரைத்த  மருந்துகளை எடுத்துக் கொண்டதில் வலி நீங்கியிருந்தாலும், அவள் வயிறு தொடர்ந்து பெருத்துக் கொண்டே தான் வந்தது.


பின்னர் தனது நோயிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மருத்துவமனைகளுக்குச் சென்றார். அவருக்கு கல்லீரல் பாதிப்பு, கருப்பை புற்றுநோய், அகியவற்றுடன் அடிவயிற்று மற்றும் மார்பில் அசாதாரணமாக திரவம் சுரக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இருப்பினும், அவருடைய வயிறு பெருத்து கொண்டே போவதற்கு என்ன காரணம் என்பதை அவர்களால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.


ALSO READ | உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்


இந்த வியாதியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அவர், இப்போது தான் அவதிப்பட்டு வரும் மர்மமான நோயிலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில்,  சிகிச்சை பெற 3,290 டாலர் நிதி திரட்ட, சமூக ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முன்னதாக, வீட்டு வேலைகளை வேகமாக செய்த அவருக்கு இப்போது, ஒன்றும் செய்ய இயலவில்லை என அவர் மிகவும் வருந்துகிறார்.  அவருக்கு இருக்கும் மிகப்பெரிய வயிறு அவரது இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. அவரது இரு குழந்தைகளையும், பாட்டி, தாத்தா இப்போது கவனித்து வருகிறார்கள். சீக்கிரம் குணமடைந்து ஆரோக்கியமாக இருப்பேன் என்று நம்புவதாக கூறியுள்ளார்.