உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்

1945 ஆம் ஆண்டு இதே நாளில் காலை 8:15 மணிக்கு அமெரிக்க  போர் விமானங்கள் ஹிரோஷிமவில் அணுகுண்டை வீசியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2020, 02:37 PM IST
  • ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலின் 75வது நினைவு தினமான இன்று பிரதமர் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • அணு ஆயுத தாக்குதல் எவ்வலவு கொடூரமானது என்பதை உலகம் கண்டது.
  • ஆக்ஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் அணு குண்டு தாக்குதலை நடத்தியது அமெரிக்கா.
உலகை உலுக்கிய  முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம் title=

ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலின் 75வது நினைவு தினமான இன்று பிரதமர் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக குறைவான எண்ணிக்கையில், சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் கலந்து கொண்டனர். 

ALSO READ | சீனாவில் பரவும் மற்றொரு வைரஸ்... அதிர்ச்சி தகவல்...!!!

1945 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஜப்பானிய மக்கள் வழக்கம் போல் தங்கள் காலை பணிகளை மேற்கொண்டர். தங்க வாழ்க்கையையே புரட்டி போடும் நிகழ்வு ஏற்படப்போகிறது என்பதை அப்போது தெரியவில்லை. 

காலை 8:15 மணியளவில், அமெரிக்க போர் விமானம் உலகின் முதல் அணுகுண்டான “லிட்டில் பாய்” என்னும் அணுகுண்டை வீசியது. அந்த வெடிகுண்டில் 64 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தது. 

அணு ஆயுத தாக்குதல் எவ்வளவு கொடூரமானது என்பதை உலகம் கண்டது. இதில் 3,50,000 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்த உடனேயே சுமார் 80,000 பேர் இறந்தனர். பிறகு, இதன் கதிர் வீச்சு பாதிப்பினால் ஏற்பட்ட நோயின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். ஆயிரணக்கானோர், உடல ஊனமுற்றனர். அதன் பாதிப்பு இன்று கூட காணப்படுவதாக கூறப்படுகிறது.

ALSO READ | குளிரில் உறையப்போகும் லடாக்.. இனியாவது எல்லையில் தொல்லைகள் தீருமா..!!

அணு குண்டு விழுந்த இடத்தில் உடனடியாக சுமார் 300 மீட்டர் சுற்றளவில், எதுவுமே மிஞ்சவில்லை. அனைத்து எரிந்து நாசமாயின. ஒரு வினாடிக்குள் கல்லையும் மண்ணையும் தவிர எதையும் பார்க்க முடியவில்லை. 

சிறிது நேரத்திற்கு பிறகு, அதை சுற்றி இருந்த 16 கிலோ மீட்டர் பரப்பளவில், அனைத்தும் முழுமையாக அழிந்தன. கட்டிடங்கள் தரைமட்டமாயின. புல் பூண்டு என எதுவும் மிச்சமில்லை.  

இதற்கு பின்னர் மூன்றே நாளில், ஆக்ஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் அணு குண்டு தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. இதில் 75 ஆயிரம் பேர் உடனடியாக இறந்தனர்.

அதன் பிறகு ஆறு நாட்கள் கழித்து, ஜப்பான் சரணடைந்தது, பிறகு, இரண்டாம் உலக்ப் போர் முடிவுக்கு வந்தது.

எனினும் ஜப்பான் துவளவில்லை. மீண்டு எழுந்து, இன்று, உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இன்றும் அது அமைதியின் சின்னமாக திகழ்கிறது.

இந்த அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு தாம் உலகம் அணு குண்டு தாக்குதலின் கோர முகத்தை உணர்ந்து கொண்டு, அனு குண்டு அபாயத்தை பற்றி பேச தொடங்கியது எனக் கூறலாம். 

 

Trending News