அபுதாபியில் ascவிமான நிலையத்தின் மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் ADNOC எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குக்கு அருகிலுள்ள முசாஃபா பகுதியில் மூன்று எரிபொருள் டேங்கர் லாரிகள் வெடித்துச் சிதறியதோடு, அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி போலீசார் தெரிவித்த நிலையில், இதில் இந்திய நாட்டை சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, "ஆரம்ப விசாரணையில் ஒரு சிறிய விமானத்தின் பாகங்கள் வெடிப்பு மற்றும் தீ விபத்தை ஏற்படுத்திய இரண்டு தளங்களிலும் இருந்ததால், இந்தத் தாக்குதல்கள் ட்ரோன் மூலம் (Drone Attack) நடைபெற்றிருக்கலாம்" என்று WAM என்ற அரசு ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.


சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ராணுவக் கூட்டணியுடன் போராடி வரும் யேமனின் ஹூதி இயக்கமே இந்த தாக்குதலுக்குக் காரணம் என அந்த அமைப்பின்  ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  "யுஏஇயில்" ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதாகாவும், அதுதொடர்பாக இன்னும் சில மணிநேரங்களில் விவரங்களை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  


ALSO READ | உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் 'உலக நிலை' குறித்து பிரதமர்  மோடி சிறப்புரை


ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவுடன் கூட்டணிக்கு ஆதரவான படைகள் சமீபத்தில் யேமனின் மின் உற்பத்தி (Power Production) செய்யும் ஷப்வா மற்றும் மாரிப் பகுதிகளில் ஹூதிகளுக்கு எதிராக சண்டையிட்டன.


2019ஆம் ஆண்டு முதல் யேமனில் தனது ராணுவ இருப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறைத்துள்ளது. சவூதி அரேபியா மீது ஹவுதிகள் பலமுறை எல்லை தாண்டிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மேலும் சவுதி அரேபியா மீது  தாக்குதல் நடத்துவதாக கடந்த காலங்களில் ஹவுதிக்கள் அச்சுறுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR