Afghan Update: பஞ்ச்ஷீரில் தாலிபானுக்கு உதவும் பாகிஸ்தான், தொடரும் பதட்டம்!!
ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் (NRF) தலைவர் அஹ்மத் மசூத், பாகிஸ்தான் போர் விமானங்கள் பஞ்ச்ஷிரில் குண்டுகளை வீசுவதாகவும், தங்களது எதிர்ப்பை நசுக்குவதில் தாலிபான்களுக்கு உதவி வருவதாகவும் கூறினர்.
புது டெல்லி: ஆப்கானிஸ்தானில் தாலிபான் கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வராத பகுதிகளைக் கைப்பற்றுவதில் பாகிஸ்தான் இராணுவம் தாலிபான்களுக்கு உதவுவதாகவும், பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலில் பாகிஸ்தான் பெரிய அளவில் ஆதரவு அளித்து வருவதாகவும் ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) தேசிய எதிர்ப்பு முன்னணியின் (NRF) தலைவர் அஹ்மத் மசூத், பாகிஸ்தான் போர் விமானங்கள் பஞ்ச்ஷிரில் குண்டுகளை வீசுவதாகவும், தங்களது எதிர்ப்பை நசுக்குவதில் தாலிபான்களுக்கு உதவி வருவதாகவும் கூறினர்.
மசூத் 19 நிமிட பதிவு ஒன்றை வெளியிட்டு, பஞ்ச்ஷிரில் பாகிஸ்தான் மற்றும் தாலிபான்கள் நடத்திய குண்டுவீச்சில் பாஹிம் மற்றும் மசூத்தின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
ALSO READ: தாலிபானை ஆள இருக்கும் முல்லா பராதர் பாகிஸ்தான் குடிமகனா; வைரலாகும் பாஸ்போர்ட் படம்..!!
பஞ்ச்ஷீரில் உயிர் தியாகம் செய்யப்பட்ட தியாகிகளுக்கு இரங்கல் தெரிவித்த மசூத், பாகிஸ்தான் (Pakistan) நேரடியாக பஞ்ச்ஷிரில் ஆப்கானிஸ்தானை தாக்கியதாகவும், சர்வதேச சமூகம் அமைதியாக பார்த்துக்கொண்டுள்ளதாகவும் கூறினார். தனது கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை இந்த போராட்டத்தை கைவிடமாட்டேன் என்று கூறிய அவர், பாகிஸ்தானின் உதவியுடன் தாலிபான் காட்டுமிராண்டிகளாக தங்களைத் தாக்குவதாக தெரிவித்தார்.
"தாலிபான்கள் இன்னும் சிறிதும் மாறவில்லை என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டனர். தாலிபான்கள் ஆப்கானியர்கள் அல்ல, அவர்கள் வெளியாட்கள், வெளிநாட்டவர்களுக்காக வேலை செய்கிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானை உலகின் மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த விரும்புகிறார்கள். அனைத்து ஆப்கானியர்களும் அவரவருக்கு சாத்தியமான வழியில் தாலிபான்களின் (Taliban) எதிர்ப்பில் சேர வேண்டும்." என்று அவர் வீடியோவில் கூறினார்.
பஞ்ச்ஷீரில் நிலைமை இன்னும் பதட்டமாக உள்ளது. ஒரு புறம் பஞ்ச்ஷீர் மாவட்டம் தங்களது பிடியில் வந்து விட்டதாக தாலிபான் தெரிவிக்கின்றது. எனினும் பஞ்ச்ஷீர் எதிர்ப்பாளர்களின் கையே ஓங்கி இருப்பதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
ALSO READ: பெண்கள் உரிமை பற்றி கேட்ட பெண் நிருபர், நக்கலாக சிரித்த தாலிபான்கள்: ஆப்கானில் பரிதாபம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR