ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியுள்ள நிலையில், முறையாக அரசு அமைப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் ஏதும் வெளிவராத நிலையில், தாலிபானின் இணை நிறுவனர், முல்லா அப்துல் கானி பராதர் புதிய ஆப்கானிஸ்தானின் சுப்ரீம் தலைவராக இருப்பார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
கடந்த மாதம் இறுதியில் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய நிலையில், விரைவில் ஆப்கானிஸ்தான் (Afghanistan) புதிய அரசு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முல்லா அப்துல் கானி பராதரின் 'பாகிஸ்தான் பாஸ்போர்ட்டின்' புகைபடங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கானி, பராதர் (சகோதரர்) எனவும் அழைக்கப்படுகிறார். அவர் 2020 ஆம் ஆண்டில் முஹம்மது ஆரிஃப் அகா (Muhammad Arif Agha) என்ற பெயரில் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டைப் பெற்றார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், முல்லா அப்துல் கானி பராதர் மற்றும் முஹம்மது ஆரிஃப் ஆகா ஆகியோர் ஒரே நபர் அல்ல என்றும் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படம் பராதரின் முகத் தோற்றத்துடன் பொருந்தவில்லைஎன்றும் தலிபான்கள் ஏற்கனவே கூறியிருந்தனர்.
ALSO READ | Afghanistan: ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான்; காரணம் என்ன..!!
பாகிஸ்தான் பாஸ்போர்ட் குறித்த அத்தியாயத்தில், ஜூன் 25, 2020 அன்று, ஆப்கானிஸ்தானின் காமா பிரஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் முல்லா பராதர் பாஸ்போர்ட் மட்டுமல்ல, பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டையையும் வைத்திருந்தார் என கூறப்பட்டிருந்தது.
முஹம்மது ஆரிஃப் ஆகா என்னும் கற்பனையான அடையாளத்தின் கீழ் பராதருக்கு, பாகிஸ்தான் அடையாள ஆவணங்களை வழங்கியதாக அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் முன்னாள் அதிகாரியை மேற்கோள் காட்டி அந்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த ஆவணங்கள் பாகிஸ்தானின் கராச்சியில், 2014, ஜூலை 7, அன்று முல்லா பரதருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள கைப்பற்றி விட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் அவர்களால் முறையாக புதிய அரசு குறித்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை.
ALSO READ | ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR