காபூல்: ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, தாலிபான்கள் பெரிய உறுதி மொழிகளை வாரி வழங்கி வருகிறார்கள். பெண்கள் விஷயத்தில் தங்களது முந்தைய அரசாங்கத்தை விட தங்களது புதிய அரசாங்கம் மிகவும் தாராளமாக இருக்கும் என்று தாலிபான்கள் கூறுகின்றனர்.
ஆனால் பெண்கள் மீதான கொடுமை பற்றிய செய்திகளும் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில், தாலிபான் (Taliban Jihadis) போராளிகளின் சில படங்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில், நேர்காணல் செய்யும் பெண் நிருபரைப் பார்த்து கேலியும் கிண்டலுமாக அவர்கள் சிரிப்பது தெரிகிறது.
நேர்காணலின் காட்சிகள் வெளியிடப்பட்டன
'தி சன்' அறிக்கையின்படி, பெண் நிருபர் தாலிபான் போராளிகளிடம் 'பெண்கள் உரிமைகள்' பற்றி ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு அவர்கள் அது ஒரு நகைச்சுவை போல கிண்டலாக சிரிக்கத் தொடங்கினர். ஆப்கானிஸ்தான் பெண்களைப் பற்றி தாலிபானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய தெளிவான கருத்தை வழங்கும் நேர்காணலின் காட்சிகளை Vice Documentary வெளியிட்டுள்ளது.
வெளி உலகுக்கு, தாலிபான்கள் தாங்கள் மாறி விட்டதாக காட்டிக்கொண்டாலும், பெண்களுக்கு மரியாதை வழங்குவதாக காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர்களுக்குள் இருக்கும் தீயவை இன்னும் அப்படியேதான் உள்ளது என்பது தெளிவாகிறது.
ALSO READ: Guardian of Taliban:தலிபான்களின் மிகப்பெரிய 'பாதுகாவலர்' என பாகிஸ்தானின் ஒப்புதல்
பெண் நிருபர் கேட்ட கேள்வி என்ன?
பெண் நிருபர் நான்கு தாலிபான் போராளிகளிடம் பல கேள்விகளைக் கேட்டார். ஆனால், பெண்களின் உரிமைகள், அரசாங்கத்தில் (Afghanistan Government)அவர்களின் பங்கு ஆகியவைப் பற்றிய கேள்விகளை அவர் கேட்கத் தொடங்கியவுடன் தாலிபான் போராளிகள் சிரிக்கத் தொடங்கினர்.
"போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் பெண்களின் உரிமைகள் என்னவாக இருக்கும்? புதிய தாலிபான் அரசாங்கம் பெண்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை உள்ளடக்கியதா?" என்று அந்த பெண் நிருபர் கேட்டார். இதற்கு போராளிகளில் ஒருவர், ஷரியா சட்டத்தின் கீழ் உரிமைகள் வழங்கப்படும் என்று பதிலளித்தார்.
தாலிபான்கள் கேமராவை மூடினர்
இப்படி கூறிய உடனேயே, நான்கு தாலிபான்களின் முகத்திலும் விசித்திரமான புன்னகை பரவத் தொடங்கியது. அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்து நிருபர் பேசியபோது, அவர் ஒரு வேடிக்கையான விஷயத்தைப் பற்றி கூறியது போல அவர்கள் சிரிக்கத் தொடங்கினர்.
இதற்கிடையில், போராளியில் ஒருவர் கேமராமேனிடம் உடனடியாக கேமராவை மூடுமாறு கூறினார். ஆனால் மைக் இயக்கத்திலேயே இருந்தது. அதில் அவர்களது வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு தாலிபான் போராளி, “இந்த கேள்வியைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்து விட்டது” என்று கூறினார். இந்த வீடியோ, ஆப்கானிஸ்தானை தாலிபான் ஆக்கிரமிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR