ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து 44 கி.மீ தொலைவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 6.1-ஆக பதிவானது. சுமார் 51 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், சுமார் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த நிலநடுக்கத்தினால் ஆப்கானிஸ்தானின் பக்டிகா, நங்கர்ஹர் மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 920-ஆக அதிகரித்துள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 250 பேர் பலி



பாக்டிகா மற்றும் கோஸ்ட் பகுதியில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க, பிரதமர் முகமது ஹசன் அகுண்ட் காபூலில் அதிபர் மாளிகையில் அவசரக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். 


மேலும் படிக்க | உக்ரைன் போருக்கு மத்தியில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR