தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பயங்கரவாதிகளான தாலிபான்களை சமான்ய குடிமக்கள் என்று கூறி தனது அன்பை வெளிப்படுத்தினார்.
காபூல்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு (Afghanistan) பயங்கரவாதிகளை பெரிய அளவில் அனுப்பி, தலிபான்களின் கைகள் வலுப்பெறு உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல், தலிபான்கள் சார்பாக பாகிஸ்தான் இராணுவமும் போராடுகிறது என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் உள்நோக்கத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அரசு, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறியது.
பாகிஸ்தானிய (Pakistan) அமைப்புகளால் தாலிபான்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பயங்கரவாதிகளான தலிபானியர்களை சாதாரண குடிமக்கள் என்று கூறி தனது அன்பை வெளிப்படுத்தினார்.
வீடியோ செய்தி மூலம் அம்பலம்
செய்தி நிறுவனமான ANI, ஆப்கானிஸ்தான் டைம்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு அனுப்பிய வீடியோ செய்தியில், ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தாண் வந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. வீடியோ செய்தியில், அரசு செய்தித் தொடர்பாளர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் போராளிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததாக துல்லியமான உளவுத்துறை அறிக்கைகள் எங்களிடம் உள்ளன என்று கூறியுள்ளார். 15,000 க்கும் மேற்பட்ட போராளிகள் ஆப்கானிஸ்தான் வந்துள்ளனர்.
ALSO READ | அதிர்ச்சி தகவல்! டேனிஷ் சித்திகி தாக்குதலில் இறக்கவில்லை; ‘படுகொலை’ செய்யப்பட்டார்
அஷ்ரப் கானியின் குற்றம் சாட்டு
பாகிஸ்தானின் செயல்களைப் பார்க்கும்போது, தலிபான்களுக்கு பயிற்சி மற்றும் பணத்துடன், பாகிஸ்தான் உதவுவது வழக்கமானதாக அறியப்படுகிறது என்று ஆதிபரின் செய்தித் தொடர்பாளர் கூறினார். முன்னதாக, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் ஒரு மாதத்தில் பாகிஸ்தானில் இருந்து 10,000 வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்துள்ளதாக கூறினார். ஜூலை தொடக்கத்தில், பயங்கரவாத அமைப்புகளுடனான உறவை முறித்துக் கொள்ளாததற்காக பாகிஸ்தானை அவர் கடுமையாக சாடினார். அமைதி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட தாலிபான்களை இம்ரான் அரசு வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க துருப்புக்களின் விலகல்
அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, ஆப்கானிஸ்தானை நிலை குலைய செய்ய, பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டி வருகிறது. பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து தலிபான்களுக்கு ஆதரவளித்து வருகிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா நெருக்கமாக இருப்பது, பாகிஸ்தான் கண்களை உறுத்தி கொண்டே இருந்தது. ஆனால், அமெரிக்க இராணுவத்தின் முன்னிலையில், பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது அமெரிக்கப் படைகள் திரும்பி சென்று விட்டதால், பாகிஸ்தானுக்கு அதன் திட்டங்களை நிறைவேற்ற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ALSO READ | ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெறியாட்டம்; வீதிகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR