காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்னர் பல முன்னாள் அரசு அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துதனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல்களின்படி, லாக்மேன் மாகாணத்தின் ஆளுநரும் காவல்துறைத் தலைவரும் ஐந்து நாட்களுக்கு முன்பு தாலிபான்களிடம் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் இன்னும் தீவிரவாதிகளின் பாதுகாப்பில்தான் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தாலிபான்கள் (Taliban) நாட்டை கைப்பற்றிய பிறகு காணாமல் போனவர்களில் கஸ்னியின் பிடி 1 இன் முன்னாள் காவல்துறைத் தலைவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தகது.


"என் தந்தையை விடுவியுங்கள். ஏனென்றால் நீங்கள் பொது மன்னிப்பை அறிவித்துள்ளீர்கள்" என்று கால்ஜியின் மகன் முகமது ஹஷேம் கால்ஜி கூறினார். தாலிபான்கள் தங்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் மக்கள் வலியுறுத்துவதாக டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


இதற்கிடையில், தாலிபான் செய்தித் தொடர்பாளர், முந்தைய அரசாங்கத்தில் இராணுவம் அல்லது சிவில் துறையில் பணியாற்றியவர்களை இந்த குழு மன்னித்துவிட்டதாக அறிவித்தார்.


ALSO READ: சீனாவால் ஆப்கானின் வளர்ச்சியில் உதவ முடியும்: சீனா மீது தாலிபான் கொண்டுள்ள நம்பிக்கை


அஷ்ரப் கானி (Ashraf Ghani) காபூலை விட்டு வெளியேறியதோடு, ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் அவசரத்தில் உள்ளனர். தாலிபான்கள், அதிபர் மாளிகைக்குள் நுழைந்து ஆப்கான் அரசுக்கு எதிரான வெற்றியை அறிவித்தனர்.


ஆப்கானிஸ்தானில் (Afghanistan) ஸ்திரத்தன்மையை பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், நாட்டில் பயங்கரவாதக் குழுவின் கொடூரங்களுக்கு பயந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேற, இன்னும் விமான நிலையத்திற்கு விரைந்துகொண்டுதான் இருக்கின்றனர்.


ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் குடிமக்களை விரைவாக வெளியேற்றி வருகின்றன. சனிக்கிழமை முதல் 7,000 க்கும் மேற்பட்ட மக்களை விமானம் மூலம் அனுப்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


தாலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானின் எதிர்கால அரசாங்க திட்டங்கள் பற்றி விவாதித்து வருகின்றனர். மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தான் உள் கட்சிகளுடன் தொடர்பில் உள்ளனர்.


ALSO READ: Afghanistan: ஹக்கானி நெட்வொர்க் வசம் சென்றது பாதுகாப்பு பொறுப்பு; அச்சத்தின் உலகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR