காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி நூற்றுக்கணக்கான போராளிகள் சென்று கொண்டிருப்பதாக தாலிபான்கள் கூறியதாக சில செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக், தாலிபான் போராளிகள், பஞ்ஷிர் மாகாணத்தை தாக்கும் உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தான் (Afghanistan) தலைநகர் காபூலின் வடகிழக்கில் உள்ள பஞ்ச்ஷிர், தாலிபான்களுக்கு சவாலாக உள்ள ஒரு மாகாணமாகும். கானி அமைச்சரவையின் முதல் துணைத் தலைவர் அம்ருல்லா சலேஹ் மற்றும் அஹ்மத் மசூத் ஆகியோரது  தலைமயில் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் குழுவின் மையப்பகுதியாக இது விளங்குகிறது.


அம்ருல்லா சலே ட்விட்டரில், "பஞ்ஷீருக்கு அருகில் தாலிபான்கள் தங்கள் படைகளை குவித்துள்ளனர். அருகில் உள்ள அந்தராப் பள்ளத்தாக்கின் பதுங்கு மண்டலத்தில் சிக்கி அவர்கள் மிகுந்த பிரச்சனைக்கு ஆளான அடுத்த நாள் இப்படி நிகழ்ந்துள்ளது. எங்கள் படைகள் சாலாங் நெடுஞ்சாலையை மூடியுள்ளன. இந்த பகுதிகளை தாலிபான்கள் தவிர்ப்பது நல்லது” என்று கூறியுள்ளார்.


ALSO READ: ஆப்கானில் பல முன்னாள் அரசு அதிகாரிகளை காணவில்லை: பதட்டத்தில் குடும்பங்கள்


1980 களில் ஆப்கானிஸ்தானின் சோவியத் எதிர்ப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத், பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு தாலிபான்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் எதிர்ப்பு போராளிகள் மீண்டும் போராட தயாராக இருப்பதாகவும் கூறினார். தாலிபான் தீவிரவாத குழு பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற முயற்சித்தால், கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அவர் கூறினார்.


"நாங்கள் சோவியத் யூனியனை எதிர்கொண்டுள்ளோம், எங்களால் தாலிபான்களையும் (Taliban) எதிர்கொள்ள முடியும்" என்று அவர் அல் அரபியாவிடம் கூறியதாக செய்தி நிறுவனமான IANS தெரிவித்துள்ளது.


"எங்களுடைய தந்தையின் காலத்திலிருந்து நாங்கள் பொறுமையாக சேகரித்த வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் எங்களிடம் அதிகமாக உள்ளன" என்று அவர் வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறினார். அவர்களுடன் இணைய வந்த படைகளும் தங்களுடன் பல ஆயுதங்களை எடுத்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


"தாலிபான் போர்வீரர்கள் தாக்குதல் நடத்தினால், அவர்கள் நிச்சயமாக எங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்வார்கள்," என்று அவர் கூறினார்.


ஞாயிற்றுக்கிழமை, தாலிபான்கள் மசூதை சரணடையலாம் என கூறியுள்ளனர். தாங்கள் சரணடைய மாட்டோம் என்றும் உள்ளூர் மக்கள் போராடத் தயாராக உள்ளார்கள் என்றும் அவர் கூறினார். தானும் அவரது ஆதரவாளர்களும் அமைதியான தீர்வை விரும்புவதாகவும், தாலிபான்களுடன் ஒரு உள்ளடங்கிய அரசாங்கத்துக்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் மசூத் கூறினார். ஆனால், தாலிபான் அதற்கான வாய்ப்பை நிராகரித்தது.


ALSO READ: அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR