ஆப்கானை ஆளப்போகும் தலைவரை இறுதி செய்த தாலிபான்; வெளியானது முக்கிய அறிவிப்பு..!!

அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களின் 20 வது ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை அன்றோ அல்லது சில நாட்கள் கழித்தோ புதிய அரசு அமைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை (Afghanistan) தாலிபான் கைப்பற்றியுள்ள நிலையில், முறையாக அரசு அமைப்பது குறித்த செய்திகள் வந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் புதிய அரசு நியமனங்களுக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்க, பல நாட்களாக நடைபெற்று வரும் ஆலோசனைகளுக்குப் பிறகு, தலிபான்கள் இறுதியாக அதன் தலைமையை இறுதி செய்து, முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை ஆப்கானை ஆளப்ப்போகும் புதிய தலைவராக நியமித்துள்ளதாக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களின் 20 வது ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை அன்றோ அல்லது சில நாட்கள் கழித்தோ புதிய அரசு அமைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கூறிய மூத்த தலிபான் (Taliban) தலைவர் ஒருவர், முல்லா முகமது ஹசன் அகுந், ஆப்கானை ஆளப்போகும் புதிய தலைவர் என அமீருல் மொமினீன் ஷேக் ஹிபத்துல்லா அகுன்சாடா முன்மொழிந்தார் என்றும் முல்லா அப்துல் கானி பரதர் மற்றும் முல்லா அப்துஸ் சலாம் ஆகியோர் அவரது பிரதிநிதிகளாக பணியாற்றுவார்கள் எனவும் கூறியதாக என த நியூஸ் இன்டர்நேஷனலில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.
ALSO READ: தாலிபானை ஆள இருக்கும் முல்லா பராதர் பாகிஸ்தான் குடிமகனா; வைரலாகும் பாஸ்போர்ட் படம்..!!
முல்லா முகமது ஹசன் அகுந்தின் நியமனத்தை மூன்று தலிபான் தலைவர்கள் உறுதி செய்ததாகவும் அறிக்கை கூறுகிறது. இதேபோல், தலிபான் நிறுவனர் முல்லா முகமது உமரின் மகன் முல்லா யாகூப், ஆப்கானிஸ்தானின் (Afghanistan) பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும். முல்லா அமீர் கான் முத்தாகி புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தலிபான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் அந்த முல்லா முகமது ஹசன் அகுந்த்?
முல்லா முகமது ஹசன் அகுந்த் தற்போது முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற தாலிபான் அமைப்பான ரெஹ்பாரி ஷுரா என்னும் அமைப்பின் தலைவராக உள்ளார், கந்தஹாரைச் சேர்ந்தவர், இவர், தாலிபான் ஆயுத இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார் என்று அறிக்கை கூறுகிறது.
முன்னதாக, தாலிபானின் இணை நிறுவனர், முல்லா அப்துல் கானி பராதர் புதிய ஆப்கானிஸ்தானின் சுப்ரீம் தலைவராக இருப்பார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
ALSO READ: பெண்கள் உரிமை பற்றி கேட்ட பெண் நிருபர், நக்கலாக சிரித்த தாலிபான்கள்: ஆப்கானில் பரிதாபம்
முல்லா ஹசன் ஆப்கானிஸ்தானில் முந்தைய தாலிபான் அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் பணியாற்றினார். முல்லா முகமது ரப்பானி அகுந்த் பிரதமராக இருந்தபோது அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தார், பின்னர் துணைப் பிரதமரானார்.
இதேபோல், ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவரான மற்றொரு மூத்த தாலிபான் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி, உள்துறை அமைச்சராக முன்மொழியப்பட்டுள்ளதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ALSO READ | Afghanistan: ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான்; காரணம் என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR