Turkey-Syria Earthquake: துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கி.மீ., (1.2 மைல்) ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதே பிராந்தியத்தில் பேரழிவு ஏற்படுத்திய கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துருக்கியின் தென்கிழக்கு ஹடாய் மாகாணத்தில் சமீபத்திய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஏற்கனவே கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு முன்பு பாரிய நிலநடுக்கத்தால் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலிலும் இந்த அதிர்வு உணரப்பட்டது. புதிய உயிரிழப்புகள் எதுவும் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அப்பகுதியில் பல கட்டடங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | நிலநடுக்கத்தால் இரண்டாய் பிரிந்த கிராமம்! துருக்கி பேரழிவினால் தொடரும் சிக்கல்கள்



இருப்பினும், இஸ்தான்புல்லை தலைமையிடமாக கொண்ட கண்டில்லி கண்காணிப்பு மையம், துருக்கியின் தென்கிழக்கு ஹடாய் மாகாணத்தை தாக்கிய 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது என்று கூறியுள்ளது.  பிப்ரவரி 6 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு 45,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர். அந்த நிலநடுக்கத்திற்கு பிறகு துருக்கி ஏற்கனவே 6,000-க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகளை சந்திதத்து.


பிப்ரவரி 6 அன்று துருக்கியின் தென்கிழக்கு மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஒரு வலுவான, 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 45,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாக மாறினர். அத்துடன் பொருளாதாரச் செலவு பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


துருக்கி மற்றும் சிரியாவில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் முதன்மையாக இந்தியாவும் இருந்து வருகிறது. துருக்கி மற்றும் சிரியா பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் பின் அதிர்வுகளுக்குப் பிறகு உதவியை வழங்குவதற்காக இந்தியா "ஆபரேஷன் தோஸ்த்" என்பதை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்துடன் இணைந்து சிரியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இந்திய அரசு டன் கணக்கில் நிவாரணப் பொருட்களை அனுப்பியது.


இதன் கீழ், ஒரு நடமாடும் மருத்துவமனை மற்றும் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு குழுக்கள் ஆகியவற்றை இந்தியா அனுப்பியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 250 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


இதை சீர்செய்ய எவ்வளவு காலம் எடுத்தாலும் அமெரிக்கா உதவும் என்று துருக்கியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நிகழ்ந்த நிலநடுக்கத்தால், துருக்கி, சிரியாவில் சுமார் 46 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Turkey: 13 நாட்களுக்கு பின் இடிபாடுகளில் புதையுண்ட கணவன் மனைவி உயிருடன் மீட்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ