சீனாவின் எல்லையை விரிவு படுத்தும் பேராசையினால், ஆக்கிரமிப்பு கொள்கையால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இப்போது அந்த பட்டியலில் தஜகிஸ்தான் இணைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தஜகிஸ்தான் மத்திய ஆசியாவில் உள்ள ஏழை நாடுகளில் ஒன்றாகும்.  இப்போது சிறிய நாடான தஜகிஸ்தான் மீது சீனாவின் கண் விழுந்துள்ளது.


சீனாவில் அதிகார பூர்வ ஊடகம் கடந்த சில வாரங்களாக, தஜகிஸ்தானின் பாமிர் மலை பகுதியை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி வருகிறது. பாமிர் மலை பகுதி சீனாவிற்கு சொந்தமான பகுதி என்றும், அதனை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது.


ALSO READ | உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்


இதில் மத்திய ஆசியா பகுதி என்பது உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், ரஷியாவும் இந்த நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


2010 ஆம் ஆண்டும் தஜகிஸ்தானிற்கும், சீனாவிற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், தஜகிஸ்தானிடம் இருந்து பாம்ரிஸ் பிரதேசத்தின் சுமார் 1158 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு சீனா பறித்தது. தஜகிஸ்தான் - ஆஃகானிஸ்தான் எல்லை பிரதேசத்திற்கு அருகில் உள்ள தஷ்குர்கன் என்ற பகுதியில், சீன தற்போது விமான நிலையத்தை அமைத்து வருவதால்,  தஜகிஸ்தான் கவலை கொண்டுள்ளது. 


அதோடு மட்டுமல்லாமல், தஜகிஸ்தானில் உள்ள தங்க வளங்கள் பற்றியும் சீன பேசுகிறது. தஜகிஸ்தானின் வடக்கு பகுதியில், தங்க சுரங்கங்களில் தங்கத்தை எடுக்க சீனாவிற்கு தஜகிஸ்தான் அரசு அனுமதித்துள்ளது. 


ALSO READ | இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி மாபெரும் வெற்றி


சீனா, தஜகிஸ்தான் எல்லை பகுதியில், சாலை கட்டமைப்பு பணிகள், வளர்ச்சி பணிகள், விமான நிலையம் அமைத்தல் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, அண்டை நாடுகளின் மீது ஆதிக்கம் செய்ய நினைக்கும், வளைக்க நினைக்கும் சீனாவின் எண்ணத்தை தெளிவாக பிரதிப்பலிக்கிறது என அண்டை நாடுகள் அனைத்தும் நம்புகின்றன.  


ஏனென்றால், சீனாவின் வரலாறு அப்படி. அது எப்போதுமே, தர்மத்திற்கு மாறாக செயல்பட்டு  அண்டை நாடுகளை ஆக்கிரமித்து, தனது எல்லைகளை விரிவுபடுத்தும் பேராசை கொண்ட நாடாகவே இருந்து வருகிறது.