ரஷ்ய இளைஞருக்கு வருங்கால மனைவியை கண்டுபிடித்து கொடுத்த ஏஐ..! மேட்ரிமோனிக்கு ஆப்பு
ரஷ்யாவைச் சேர்ந்த சாப்ட்வேர் டெவலப்பர் சாட்ஜிபிடி ஏஐ உதவியுடன் டேட்டிங் செயலி ஒன்றில் தனக்கு பொருத்தமான வருங்கால மனைவியை கண்டுபிடித்துள்ளார்.
உலகம் வேகமாக செயற்கை நுண்ணறிவு யுகமாக மாறிக் கொண்டிருக்கிறது. கற்பனையை கண்முன்னே நொடிப்பொழுதில் கொண்டு வந்து கொடுக்கும் அசாத்திய திறமையும், தொழில்நுட்பமும் கொண்ட செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் அப்டேட்டாகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு டெக்னாலஜியிலும் செயற்கை நுண்ணறிவு புகுந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் இனி மேட்ரிமோனி வெப்சைட்டுகளுக்கு வேலை இல்லாமல் செய்யப்போகிறது ஏஐ. ஏனென்றால் ரஷ்ய இளைஞர் ஒருவருக்கு சாட்ஜிபிடி பொருத்தமான பெண்ணை தேர்வு செய்து கொடுத்திருக்கிறது.
23 வயதான ரஷ்யாவைச் சேர்ந்த சாப்ட்வேர் டெவலப்பர் அலெக்சாண்டர் ஜாதன் டிண்டர் டேட்டிங் செயலியில் தனக்குப் பொருத்தமான பெண்ணைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் சாட்ஜிபிடியை பயன்படுத்தியிருக்கிறார். "AI தொழில்நுட்பம் கிட்டத்தட்ட 5,000 பெண்களுடன் சாட் செய்து, கரினா என்ற பெண்ணை எனக்குப் பொருத்தமானவர் என்று கண்டுபிடித்துக் கொடுத்தது. இந்த வழியில் பொருத்தமான பெண்ணைக் கண்டுபிடிக்க சுமார் ஓராண்டு காலம் ஆனது" என்று அலெக்சாண்டர் ஜாதன் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டின் இறுதியில் ChatGPT கரினாவை தேர்ந்தெடுக்கலாம் என்று பரிந்துரைத்ததாகவும் கரினாவிடம் ப்ரபோஸ் செய்த பின் இருவருக்கும் இடையிலான உறவு சீரானதாகவும் வலுவாகவும் உள்ளதாகவும் ஜாதன் கூறியுள்ளார். தான் கரினாவைக் கண்டுபிடிக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது பற்றி அவருக்குத் தெரியாது என்றும் பிறகுதான் அதைத் தெரிந்துகொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிறந்த வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு புரோகிராமை உருவாக்க முடியும் என்றும் ஆனால் இதுபோன்ற ஒரு திட்டத்தை உருவாக்குவது பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஜாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் படிக்க | சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு அதிகம் செலவு வைக்கும் 9 நாடுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ