நடுவானில் பைலட் புகைப்பிடித்ததால் அவசரமாக தரையிறங்கிய சீனா விமானம்
விமானத்தில் பைலட் புகைபிடிக்கும் போது தவறுதலாக ஏர் கண்டிஷனரை மூடியதால் பயணிகள் அறைக்குள் புகை பரவியது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) அன்று சீனா நாட்டுக்கு சொந்தமான சீன விமான நிலையத்தில் இருந்து ஏர் சீனா விமானம் ஒன்று நடுவானில் பறந்துக்கொண்டு இருக்கும் போது இணை பைலட் ஒருவர் எலக்ட்ரானிக் சிகரெட் புகைத்துள்ளார்.
அப்பொழுது சிகரெட் புகைத்துக்கொண்டே தவறாக கதவை மூடப்பட்டதால், புகை பயணிகள் அறைக்குள் பரவியது. இதனால் ஏர் கண்டிஷனர் காற்றுச்சீரமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் 35,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டு இறந்த விமானம் திடீரென 25,000 அடிக்கு இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இதனால் பைலட் அறையில் இருந்து காற்றின் அழுத்தம் காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்கப் படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதுக்குறித்து விசாரணை நேற்று (ஜூலை 12) ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. விமான விதிமுறைப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் விதிகள் மீறப்பட்டு உள்ளதாக தெரிந்தால், நிறுவனம் அவருடன் எந்தவித சகிப்புத்தன்மையும் காட்டாது என ஏர் சீனா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை படிக்க Zee News Tamil கிளிக் செய்யவும்.