புதுடெல்லி: அல்-கொய்தா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான அல்-ஜவாஹிரி (Al-Jawahiri) இறந்துவிட்டதாக அரபு செய்திகளை மேற்கோள் காட்டி வரும் தகவல்கள் கூறுகின்றன. அவர் ஆப்கானிஸ்தானில் அல்-ஜவாஹிரி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Arab News கொடுத்த தகவல்களின்படி,  அல்-ஜவாஹிரி (Al-Jawahiri) இயற்கையாகவே உயிரிழந்தார். 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் இறந்த செய்தி வந்துள்ளது.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியை வியாழக்கிழமை காபூலில் சந்தித்தார். இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தான் சமாதான ஒப்பந்தம் பற்றி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரு நாடுகளிலுமே அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தீவிரமாக செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR