சமீப காலமாக, தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏராளமான சீன தொழிலதிபர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து செல்கின்றனர். மேலும், ஆப்கானிய ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டாலும், பெய்ஜிங் இங்கு தூதரகத்தை பராமரித்து வருகிறது.
ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தபோது அஷ்ரஃப் கனி, அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சிலருடன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார்.
ஆப்கானிஸ்தான் 20 ஆண்டுகால போருக்கு சாட்சியாக உள்ளது. எனவே அதற்கு அதிக சர்வதேச ஆதரவு தேவை என்று இஸ்லாமிய அமீரக துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்த நிலையில், விமான நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக தாலிபான் அரசு கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் புதிய ராணுவத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட தாலிபான் மூத்த தலைவர் காரி பாசிஹுதீன், நாட்டில் விரைவில் "வழக்கமான மற்றும் ஒழுக்கமான" இராணுவம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான், ஆப்கானின் புதிய அரசின் சுப்ரீம் லீடராக ஹைபத்துல்லா அஹுன்ஸாடா புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் என அறிவித்துள்ளது.
அமெரிக்க ட்ரோன் தாக்குதலில், ISIS கோரசன் நெட்வொர்க் அமைப்பை சேர்ந்த இரண்டு உயர்மட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.