நியூடெல்லி: சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27, 2022) மாலை சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலை அல்-ஷபாப் தீவிரவாதிகள் தாக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய மொகடிஷுவில் அமைந்துள்ள அதிபர் மாளிகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தாக்குதல் செய்தியை, பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரியை மேற்கோள்காட்டி AFP செய்தி முகமை, செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஹோட்டலை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.


"பயங்கரவாத ஆயுததாரிகள் கட்டிடத்தில் ஒரு அறைக்குள் உள்ளனர். பாதுகாப்புப் படையினர் முற்றுகையை மிக விரைவில் முடிக்க உள்ளனர்... இதுவரை நான்கு பேர் இறந்ததை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்" என்று பாதுகாப்பு அதிகாரி முகமது தாஹிர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


மேலும் படிக்க | Dallas Aircraft crash video: விமான சாகசத்தில் விபரீதம்... 2 விமானங்கள் மோதி பயங்கர விபத்து - 6 பேர் பலி!


மொகடிஷுவில் உள்ள வில்லா ரோஸ் ஹோட்டல், அரசாங்க அதிகாரிகள் தங்கும் இடம் ஆகும். அங்குள்ள தனது இருப்பிடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு வெடிக்கச் செய்ததாக கூறும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆடம் அவ் ஹிர்சி, தற்போது தான் பாதுகாப்பாக இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் சோமாலியாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் முகமது அகமதுவும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.


வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஹோட்டலை கைப்பற்றியது எத்தனை பேர் என்பது தெரியவில்லை. இந்தத் தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர், பெரிய குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து பலத்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


நாங்கள் அதிர்ந்துபோய்விட்டோம் என்று கூறிய அகமது அப்துல்லாஹி என்பவர், "நாங்கள் வீட்டிற்குள் இருக்கிறோம், துப்பாக்கிச் சூட்டைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார். ஹோட்டலின் ஜன்னல்கள் வழியாக அரசு அதிகாரிகள் மீட்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி முகமது அப்டி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.


மேலும் படிக்க | அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல்


கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு அல்-ஷபாப் அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டில், மற்றொரு பிரபலமான ஹோட்டலைத் தாக்கி 20 பேரைக் கொன்றது. அந்த நேரத்தில் ஜனாதிபதி ஹசன் ஷேக் மொஹமட், அல்-ஷபாப் குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


அக்டோபரில் நகரின் பரபரப்பான சாலைக்கு அருகே நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்.


அல்-ஷபாப் அமைப்பிடம் இருந்து கிராமங்களையும் நகரங்களையும் மீட்பதற்காக, அதிபர் சோமாலிய இராணுவத்தையும் அரசாங்க ஆதரவு போராளிகளையும் திரட்டினார். அல்-ஷபாப் குழு இஸ்லாமியக் குழு நாட்டின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இஸ்லாமிய சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் அடிப்படையில், அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | மாலத்தீவு தலைநகர் மாலேயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 இந்தியர்கள் மரணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ