Covid New Wave: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல்

Corona Fourth Wave: வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களைத் தவிர, சீனாவில் 39,506 பேருக்கு கொரோனாத் தொற்று பதிவாகியுள்ளது, அச்சத்தை அதிகரித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 27, 2022, 10:30 AM IST
  • சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு
  • சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தும் சீன கொரோனா
  • சீனாவில் கடுமையாகும் லாக்டவுன் அமல்
Covid New Wave: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல் title=

பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கோவிட் வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று (நவம்பர் 27)) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்று (நவம்பர் 26) நாட்டில் அதிகபட்சமாக 39,791 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. கண்டறியப்பட்ட வழக்குகளில், 3709 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன, 36,082 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்த அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை.

தொடர்ந்து நான்காவது நாளாக அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு நாள் முன்பு, 35,183 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டன. அவர்களில் 3474 பேர் அறிகுறிகளுடனும், 31,709 பேர் அறிகுறியற்றவர்களாகவும் இருந்தனர்.

மேலும் படிக்க | Corona New Guidelines: விமான பயணிகளுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமல்

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களைத் தவிர, சீனாவில் 39,506 பேருக்கு கொரோனாத் தொற்று பதிவாகியுள்ளது. கொரோனா பாதித்தவரில் ஒருவர் இறந்து போனார். இதனால், தற்போதைய நான்காவது அலை கொரோனாவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,233 ஆக உயர்ந்துள்ளது.

நவம்பர் 26 ஆம் தேதி நிலவரப்படி, சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 307,802 நோய் அறிகுறி உள்ளவர்கள் உள்ளனர்.

மேலும் படிக்க | Corona 4th Wave: குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சீனா தனது கடுமையான 'ஜீரோ-கோவிட் கொள்கையை' செயல்படுத்தி வருகிறது, இதன் ஒரு பகுதியாக, கொரோனா பாதிப்பு இருக்கும் இடங்களில், லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோய்த்தொற்றுகளுடன் இன்னும் போராடும் முக்கிய பொருளாதாரங்களில் சீனாவும் உள்ளது.

கடுமையான லாக்டவுனுக்கு எதிராக பொதுமக்கள் கோபம் அடைந்துள்ளனர். பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன, மக்களுக்கும், அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுடனான மோதலும் அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் உலக அளவில் சீனா அளவிற்கு வேறு எங்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7,561 ஆகக் குறைந்துள்ளது, நாட்டில் இதுவரை 4,41,28,580 நோயாளிகள் இந்த கொடிய வைரஸின் தாக்குதலில் இருந்து மீண்டுள்ளனர். 

மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில கொரோனா அறிகுறிகள் உங்களுக்கும் உள்ளதா என்பதை கவனித்து உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது.

தொடர் இருமல் இருப்பது கொரோனாவிற்கான முக்கிய அறிகுறி ஆகும்.

கொரோனா நோயின் பொதுவான அறிகுறியாக மூக்கு ஒழுகுதல் இருக்கிறது

மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் 

தொண்டை புண், இருமல் மற்றும் மூக்கு அடைப்பு ஆகியவற்றுடன் தலைவலி

தொண்டை வலி, தொண்டையில் தொடர்ந்து எரியும் உணர்வு, உணவை விழுங்குவதில் சிரமம் 

மேலும் படிக்க | நெருப்புடன் விளையாடும் விஞ்ஞானிகள்! 80% இறப்பு விகிதம் கொண்ட புதிய கொரோனா வைரஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News