சீன தொழில் அதிபரும், கோடீஸ்வரரும், அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மாவை இரு மாதங்களாக காணவில்லை என செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவர் குறித்து அதிர்ச்சிகரமான பல்வேறு புதிய செய்திகளும் வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான  கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்த பிறகு, அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் பார்வையில் படாமல் மாயமாய் மறைந்துவிட்டார்.


அக்டோபர் மாதம் ஷங்காயில் (Shanghai) நடந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அவர், சீனாவின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கந்து வட்டிக்காரர்களை விட மோசமாக செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார். அது தான் அவர் செய்த தவறு.


அதை அடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் (Xi Jinping), தொழில் அதிபர் ஜாக் மாவிற்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. சீன அதிபர், அவரது நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை தடை செய்து, அதன் மூலம் ஜாக் மாவிற்கு ₹1 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்ல. ஜாக் மா சீனாவை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.


சீனாவின் மிகவும் பிரபலமான கோடீஸ்வரரும், அலிபாபா (Alibaba) நிறுவனருமான ஜாக் மா பல வாரங்களாக காணவில்லை என்ற தகவல்களுக்குப் பிறகு, அவரை சீன அரசு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதன் காரணமாக உலகின் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா கைது செய்யப்பட்டிருக்கலாம் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது. கம்யூனிஸ அரசான சீனா (China)பெரிய நபர்களைக் கைது செய்வது குறித்த தகவல்களை சீனா வெளியிடுவதில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். 


ALSO READ | Jack Ma Missing: Alibaba நிறுவனரை காணவில்லை, சீன சதியா? திடுக்கிடும் உண்மைகள்!!

இது குறித்து கருத்து தெரிவித்த சீன அரசின் ஊடகம் ஒன்று, “ஜாம் மா மிகவும் புத்திசாலி என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், தேசிய அளவிலான கொள்கை ஆதரவு இல்லாமல், அவர் இந்த உச்சத்தை அடைந்திருக்க முடியாது” என கூறியுள்ளது.


இப்போது உலக அளவில் பரவிய இந்த செய்தியை அடுத்து, உலகில் அனைவரும் ஜாக் மா எங்கே? என்ற கேள்வியை எழுப்பி வருகிரார்கள். 


சீனாவின் மிக பெரிய பணக்காரர் மட்டுமின்றி, உலக அளவில் பெரும் பணக்காரரும் செல்வாக்கும் படைத்த ஜாக் மாவின் (Jack Ma) நிலையே இது என்றால், அரசை எதிர்க்கும் சாமான்ய மக்கள் நிலை என்ன என்பதை சிந்தித்து பார்த்தால், சீனா ஒரு சர்வாதிகார நாடு என்பது புரியும். அங்கே அரசை விமர்சித்து கருத்து கூற யாருக்கும் உரிமை இல்லை. அரசை விமர்சித்தால் காணாமல் போவார்கள். 


இதற்கு முன்பும் பல இந்த காரணத்திற்கான காணாமல் போயுள்ளனர். அந்த பட்டியலில், இப்போது ஜாக் மா பெயரும் இடம்பெற்றுள்ளது. 


ALSO READ | குழந்தை பெற்றுக் கொண்டால் பணத்தை அள்ளிக் கொடுக்கும் நாடு எது தெரியுமா..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR