சீன தொழில்நுட்ப கோடீஸ்வரரும், அலிபாபாவின் நிறுவனருமான ஜாக் மாவை காணவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான மத்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் பார்வையில் இருந்து அவர் மறைந்துவிட்டார்.
மிகப் பெரிய, மிக பிராலமான தொழிலதிபரான ஜாக் மா, அவரது டேலன்ட் ஷோ ‘ஆப்பிரிக்காவின் பிசினஸ் ஹீரோஸ்' நிகழ்ச்சியின் இறுதி எபிசோடில் நடுவராக பங்கெடுக்க இருந்தார். ஆனால் மர்மமான முறையில் அவர் அந்த நிகழ்ச்சிக்கும் வரும் முன்னரே காணாமல் போனார்.
இதன் விளைவாக, அவரது புகைப்படங்கள் நிகழ்ச்சியின் வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
‘ஆப்பிரிக்காவின் வணிக ஹீரோக்கள்’ என்ற நிகழ்ச்சி வளர்ந்து வரும் ஆப்பிரிக்க (Africa) தொழில்முனைவோருக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வெல்லும் வாய்ப்பை அளிக்கின்றது.
சீனாவின் (China) பெரும்பாலான தொழிலதிபர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக வெளியிடுவதில்லை. ஆனால் ஜாக் மா வித்தியாசமானவராகைருந்தார். வழக்கத்திற்கு மாறாக அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் வெளிப்படையான தொழில் அதிபர்களில் ஒருவரான ஜாக் மா, அக்டோபர் மாதம் ஷாங்காயில் (Shanghai) தான் ஆற்றிய உணர்ச்சிகரமான உரையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கத்தினுடைய கந்துவட்டி நிதி கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான வங்கிகளை குறி வைத்து தாக்கிப் பேசினார்.
மேலும், வணிக கண்டுபிடிப்புகளையும் புதிய முயற்சிகளையும் தடுக்கும் வகையில் இருக்கும் அமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். உலகளாவிய வங்கி விதிமுறைகளை பழமைவாத அமைப்புகளுடன் அவர் ஒப்பிட்டார்.
ALSO READ: ஜோ பைடன் வந்தா எல்லாம் சரியாயிடும்.. நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா..!!!
இந்த பேச்சு சீன அரசாங்கத்தை கோபப்படுத்தியது. ஜாக் மாவின் விமர்சனங்களை கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தின் மீதான தாக்குதல் என்று அக்கட்சி கருதியது. சீன அரசாங்கம், ஜாக் மாவின் வணிக நடவடிக்கைகள் மீது அசாதாரணமான தடைகளை ஏற்படுத்தியது.
நவம்பரில், பெய்ஜிங்கில் (Beijing) உள்ள அதிகாரிகள் ஜாக் மாவை கண்டித்தனர். சீன அதிபர் ஜின்பிங்கின் (Xi Jinping) நேரடி உத்தரவின் பேரில் அவரது ஏண்ட் குரூப் குழுமத்தின் 37 பில்லியன் டாலர் ஆரம்ப பொது வழங்கல் நிறுத்தப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
ப்ளூம்பெர்க் கூற்றுப்படி, கிறிஸ்மசுக்கு முந்தைய நாள், தனது அலிபாபா குரூப் ஹோல்டிங்கில் ஏகபோக எதிர்ப்பு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு ஜாக் மா சீனாவில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டார். ஜாக் மாவின் நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஆண்ட் குழுமத்திற்கு அதன் நடவடிக்கைகளை அளவோடு செயல்படுத்த பெய்ஜிங் அரசாங்கம் உத்தரவிட்டது.
"ஒரு அவசர வேலை காரணமாக திரு ஜாக் மாவால் இந்த ஆண்டின் ‘ஆப்பிரிக்காவின் வணிக ஹீரோக்களின்’ ஃபைனலின் நடுவர் குழுவின் ஒரு பகுதியாக இருக்க முடியாது" என்று அலிபாபா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜாக் மா சீனாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவர். ஐ.நா (United Nations) மற்றும் உலகளாவிய தொண்டு நடவடிக்கைகளுக்காக அவர் மேற்கொண்ட பணிகள் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் உலகளாவிய பிம்பத்திற்கு ஒரு மென்மையான அம்சத்தை சேர்த்தன. ஆனால் அப்படிப்பட்ட பெரிய உள்ளம் கொண்ட ஒரு நல்லவர் இன்று எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருக்கிறது. அவர் காணாமல் போனதில் சீன அரசாங்கத்திற்கு ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கெள்வியும் மக்கள் மனதில் வலுவாக உள்ளது.
ALSO READ: 26/11 மும்பை தாக்குதல்களின் சூத்திரதாரி ஜாகிர்-உர்-ரெஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR