சவுதி அரேபியாவின் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்ற பின்னர் பல அதிரடி சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதும் பெண்களுக்கு நிறையவே  கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவற்றை உடைத்து, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி அளித்தார். தேசிய தினத்தில் ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து,  சவுதியில் 35 ஆண்டுகளாக சினிமா திரையிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது, அந்த தடையை பட்டத்து இளவரசர் நீக்கியுள்ளார்.


அடுத்த வருடம் மார்ச் முதல் படங்கள் திரையிடப்படும் என கூறப்படுகிறது. இதுபற்றி சவுதி அரேபியாவின் கலாசார அமைச்சர் அவாத் அல்வாத் கூறுகையில்; திரையரங்குகளை இங்கு திறப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என்று கூறினார்.


முதலில் 300 தியேட்டர்கள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் 2030-ம் ஆண்டுக்குள் இது 2000 ஆக உயர்த்தப்படும் என்றும் சவுதி தெரிவித்துள்ளது.