சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping)'உலகத்தை அழித்த' ஒரு 'கொலையாளி'யாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு இடையில் நல்லுறவு இருந்தது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்  (Donald Trump) கூறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபாக்ஸ் நியூஸின் மரியா பார்திரோமோவுடன் நடந்த ஒரு நேர்காணலில், முன்னாள் அமெரிக்க அதிபரும் ஆன டொனால்ட் டிரம்ப் சீன அதிபருடனான தனது உறவை நினைவு கூர்ந்தார்.


செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "அவர் ஒரு கொலையாளி, ஆனால் எங்களுக்கு இடையில் நல்ல உறவு இருந்தது." என்றார்


இரு தலைவர்களுக்கு இடையில் நல்ல நட்பு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக இரு தலைவர்களுக்கு இடையேயான நட்பு  பாதிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறுகிறார்.


ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!!


தங்கள் நட்புறவு பாதிக்கப்பட்டதற்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் தான் காரணம் என்று டிரம்ப் கூறினாலும், டிரம்ப் அதிபர் (Donald Trump) ஆனதிலிருந்தே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


உண்மையில், டிரம்பின் தலைமையின் கீழ் தான், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உத்தி தொடர்பான கொள்கையில்,  சீனாவை அமெரிக்காவின் முக்கிய "மூலோபாய போட்டியாளர்களில்" ஒன்றாக முத்திரை குத்தப்பட்டதோடு சீனாவை "எதிரி" என்று விவரித்திருந்தார்.


நேர்காணலின் போது, ​​​​உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயை பரப்புவதன் மூலம் சீன அதிபர் உலகம் முழுவதையும் பெரும் பாதிப்பிள்ளாக்கி விட்டார் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். ஒரு அறிவியல் ஆய்வகத்தில் தான் COVID-19 தொற்று கிருமி தயாரிக்கப்பட்டது என்றும், இதனை தயாரிக்க சீன விஞ்ஞானிகளுக்கு அறிவுறுத்தினார் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


இதற்கிடையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபருக்கு ஜி ஜின்பிங்கை நினைத்து "பயமாக" இருப்பதாகவும், எனவே கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றத்தை கண்டறிய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


ALSO READ | Cryptocurrency: கிரிப்டோகரன்ஸி குறித்து பிரதமர் மோடி முக்கிய கூட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR